முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.  நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் என அனுர அரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமினுள் அனுமதியின்றியே பொதுமக்கள உள் நுழைந்துள்ளனர்.

அவர்களை தாக்கிய படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தவறு செய்தால் யாரென்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும்.

அதேவேளை இராணுவ முகாங்களையோ காவல் நிலையங்களையோ அவசியம் இல்லாமல் அகற்ற வேண்டியது இல்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பாதுகாப்பான அல்லது முக்கியமான இடங்களை தவிர  தொடக்கத்தில் இருந்து கூடுதல் நிலங்களை விடுவித்துள்ளோம்.

எனவே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவது அல்ல மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் கொள்கை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.