Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட, மறவன்புலவு – அறுகுவெளி பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 284 கிலோ 500 கிராம் எடையுள்ள, 7 கோடி ரூபாய்கும் அதிகமான பெறுமதியான கஞ்சா பொதிகளும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்,
ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனவும், அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் சமூக செயற்பாட்டில் ஈடுபவதாகவும் தன்னை போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாவகச்சேரி காவல் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான காவல்துறையின் குழு ஒன்றினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.