Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கோரியுள்ளார்.
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எச் .உபாலி சமரசிங்க , நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உபுல் டி சில்வா, பிரதம ஆலோசகர் சாந்தா ஜெய ரட்ண ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள். இக்கலந்தரையாடலில் முன்னதாக வரவேற்பு உரையாற்றிய மாவட்ட செயலர்,
மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் உள்ளது. யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சியில் இந் நிலையம் ஓர் மைல்கல்லாக அமைய வேண்டும். இதனை மீள ஆரம்பிப்பதன் ஊடாக விவசாயம் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அமைச்சர் முன் வந்து நடவடிக்கை எடுப்பது வரவேற்க்கத்தக்கது என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க,
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிப்பது மற்றும் அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இலங்கையை பொறுத்தவரை 18 பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுகிறது. அதில் 14 இயங்கி வருகிறது.
வடக்கில் அண்ணளவாக ரூபா. 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவில்லை. இந் நிலையம் மக்களுக்கு பொருத்தமான பாதையாக காணப்படவில்லை. பிரதேச செயலகத்தின் கீழ் செயற்பாடுகள் நடைபெறுகிறது. அமைச்சின் கீழ் எந்தவொரு செயற்பாடும் காணப்படவில்லை.
இந் நிலையத்ததை மீள அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், இக் கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலுக்கு முன்னராக அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.