தொண்டமனாற்று கடல்நீரேரியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

ஆதீரா Tuesday, August 12, 2025 யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கடல்நீரேரியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது 

தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீர் ஏரியில் பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படாத நிலையில்  , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் 

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment