Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மீகொட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான 47 வயதான சாந்த முதுங்கொடுவ உயிாிழந்துள்ளாா். காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
சாந்த முதுங்கொடுவ மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளை நிற காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ள நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தலவத்துகொட பகுதியில் வைத்து த கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினரான இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினராக இருந்துள்ளாா். மேலும் அவா் , கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சர்வஜன பலய கட்சியில் போட்டியிட்ட போதும் அவா் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.