கொழும்பில் துப்பாக்கி பிரயோகம் – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

கொழும்பு , ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீகொட – ஆட்டிகல வீதியில் மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த நபர்கள் துப்பாக்கி சூட்டை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவரை ஹோமாகம மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.