காணொளி: கேரள கோவில்களில் பக்தர்களை ஆசிர்வதிக்கும் ரோபோ யானைகள்காணொளிக் குறிப்பு, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் ரோபோ யானைகள்காணொளி: கேரள கோவில்களில் பக்தர்களை ஆசிர்வதிக்கும் ரோபோ யானைகள்

13 நிமிடங்களுக்கு முன்னர்

இந்த யானைகள் உண்மையானதாக தோன்றலாம், ஆனால் இவை ரோபோ யானைகள். கேரளாவில் உள்ள பல கோவில்களில் சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு இத்தகைய ரோபோ யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. பக்தர்கள் இந்த யானைகள் முன்பு தலைவணங்கி ஆசீர்வாதம் பெறுகின்றனர், செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.

ரோபோ யானைகள் கேரளாவில் கோவில்கள் மற்றும் ஊர்வலங்களில் முதன்முறையாக 2023ம் ஆண்டில் ஈடுபடுத்தப்பட்டன. கோவில்களில் பயன்படுத்தப்படும் உண்மையான யானைகள் பலவித துயரங்களை எதிர்கொள்கின்றன. மனித-யானை மோதல் நிகழ்வுகளும் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.

மோட்டார் மூலம் இயக்கப்படும் இந்த பிரமாண்ட யானைகள், 800 கிலோகிராம் வரை எடை கொண்டவை. பிரசாந்த் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் சேர்ந்து இந்த யோசனையை முன்வைத்து, 2023ம் ஆண்டு முதல் இவற்றை உருவாக்கி வருகின்றனர்.

கேரளாவில் தற்போது 12 கோவில்களில் ரோபோ யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

செய்தியாளர், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கென்ஸ் அல் முனீர்

தயாரிப்பு: சாரதா வி மற்றும் ஷைலி பாட்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு