கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காக்கைக்தீவு ஆனைக்கோட்டை வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு சோமசுந்தரம் ஒழுங்கையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா , க,இளங்குமரன் , யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் அமைப்பாளர் சுரேன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.