யாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

டிப்பர் , கூலர் , கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.