Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் விநோதன் எழுதிய கடிதம் ஒன்று பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மாவட்டத்திலுள்ள குடும்ப நல உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான கடிதத்தில்,
அவரது கணவர் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரை ‘பயங்கரவாதிகள்’ என குறிப்பிட்டிருந்தார்
இக்குறிப்பு, தமிழ் மக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்
மேலும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடியவர்கள் எனக் கூறி, இவரின் கடிதத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழ்மக்களது உரிமைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று எழுதி தமிழ் மக்களது மனங்களைப் புண்படுத்தியமைக்காக வைத்தியர் விநோதன் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்