ஜனாதிபதிகளின் உரித்துக்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி  மஹிந்த ராஜபக்ஷ  உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. 

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் அரச உத்தியோகபூர்வ இல்லம், மாதாந்த கொடுப்பனவு, செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு, உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு வசதி வழங்கள் என்பன இதனூடாக நிறுத்தப்படவுள்ளது.