Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
டிரம்ப் – புதின் சந்திப்பு: யுக்ரேன் போருக்கு அமெரிக்கா முன்வைக்கும் தீர்வு என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அலாஸ்கா சந்திப்பில் யுக்ரேன் போர் நிறுத்தம் விவாதிக்கப்பட உள்ளது.எழுதியவர், கோர்ட்னி சுப்ரமணியன்பதவி, பிபிசி நியூஸ், வெள்ளை மாளிகைஎழுதியவர், அலி அப்பாஸ் அஹ்மதிபதவி, பிபிசி நியூஸ்13 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பில் யுக்ரேன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தச் சந்திப்பு பற்றிய அறிவிப்பை தனது ட்ரூத் சோசியல் பக்கம் மூலம் வெளியிட்டார். இந்த செய்தியை பின்னர் ரஷ்ய தரப்பும் உறுதி செய்தது. “அலாஸ்கா ரஷ்யாவுக்கு மிகவும் பக்கமாக இருப்பதால், அந்த இடம் யதார்த்தமான ஒன்றாக உள்ளது” என ரஷ்ய அதிபர் மாளிகையில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எந்தத் தீர்விலும் யுக்ரேனின் பங்களிப்பு அவசியம் என அந்நாட்டின் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். “நிலைத்த அமைதிக்காக” அனைத்து கூட்டாளிகளுடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வருவதற்கு சில மணி நேரம் முன்பாக யுக்ரேன் போர் பற்றி பேசிய டிரம்ப், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் யுக்ரேன் சில பிரதேசங்கள் இழக்க வேண்டிய நிலை வரலாம் எனத் தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃபைச் சந்தித்த புதின்ரஷ்ய-யுக்ரேன் போரை கவனித்து வருவதாகக் கூறிய டிரம்ப் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினார். “மூன்றரை ஆண்டுகளாக போர் நடந்து வரும் ஒரு பிராந்தியத்தை பற்றி நாம் பேசுகிறோம். பல ரஷ்யர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.” என்றும் தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதை மிகவும் சிக்கலானது எனக் குறிப்பிட்ட டிரம்ப், “நாங்கள் சில விஷயங்களை திருப்பி எடுக்கவும், சில விஷயங்களை மாற்றிக் கொள்ளவும் பார்க்கிறோம். இது அவ்வளவு எளிதானதல்ல” என்று கூறினார்.
அமெரிக்கா முன்வைக்கும் தீர்வு என்ன?
அமெரிக்கா முன்மொழியும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஐரோப்பிய தலைவர்களைச் சம்மதிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் படி, ரஷ்யா மேற்கு யுக்ரேனில் உள்ள தொன்பாஸ் பிராந்தியம் மற்றும் க்ரைமியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். அதற்குப் பதிலாக ரஷ்ய ராணுவம் பகுதியளவு கட்டுப்படுத்தி வரும் கெர்சன் மற்றும் ஜபோரிஷியா பிராந்தியங்களை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டும் என சிபிஎஸ் செய்தி தெரிவிக்கிறது.
அமைதிக்கான நிபந்தனைகளில் புதினும், ஜெலென்ஸ்கியும் பார தூரத்தில் இருக்கின்ற நிலையில் யுக்ரேனும் ஐரோப்பிய கூட்டாளிகளும் இத்தகைய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்வார்களா என்பது தெளிவாக இல்லை. தனது பிரதேசங்களை விட்டுக்கொடுக்கும் முடிவை ஜெலென்ஸ்கி முன்னர் பலமுறை நிராகரித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தின் படி ரஷ்யா மேற்கு யுக்ரேனில் உள்ள தொன்பாஸ் பிராந்தியம் மற்றும் க்ரைமியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.”யுக்ரேனின் பிராந்திய பிரச்னைக்கான தீர்வு அதன் அரசியலமைப்பில் உள்ளது. இதிலிருந்து யாரும் விலகிச் செல்ல மாட்டார்கள், செல்லவும் முடியாது. யுக்ரேனியர்கள், ஆக்கிரமிப்பாளருக்கு தங்களுடைய நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்காள்” என சனிக்கிழமை டெலகிராமில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தார் ஜெலென்ஸ்கி.
“எங்களுக்கு எதிரான, யுக்ரேனை உள்ளடக்காத எந்தத் தீர்வும் அமைதிக்கு எதிரான தீர்வுகளே.” எனத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, அமைதியைக் கொண்டு வரும் உண்மையான தீர்வுகளுக்குத் தனது நாடு தயாராக இருப்பதாகக் கூறினார்.
“டிரம்ப் மற்றும் அனைத்து கூட்டாளிகளுடன் இணைந்து உண்மையான, மிக முக்கியமாக நிலைத்த அமைதிக்காக வேலை செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இந்த அமைதி ரஷ்யாவின் விருப்பங்களுக்கு ஏற்ப கலைந்துவிடக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது” எனத் தெரிவித்தார் ஜெலென்ஸ்கி.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பில் ஜெலென்ஸ்கி ஏதாவதொரு விதத்தில் ஈடுபடுவது இப்போதும் சாத்தியம் தான் என்றும் மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.
ஐரோப்பா தயாரா?
ரஷ்யா தனது முழு ஆக்கிரமிப்பில் வெற்றி பெறவில்லையென்றாலும், 20% யுக்ரேன் பகுதிகளை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. யுக்ரேனின் எதிர்ப்பு நடவடிக்கைகளால் ரஷ்ய படைகளை வெளியேற்ற முடியவில்லை.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே துருக்கியில் நடைபெற்ற மூன்று கட்ட நேரடி பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ரஷ்யா முன்வைத்த ராணுவ மற்றும் அரசியல் முன்நிபந்தனைகள் நடைமுறையில் யுக்ரேனை சரணடையச் சொல்லும்படி இருப்பதாக என அந்நாடும் அதன் கூட்டாளிகளும் பார்க்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே துருக்கியில் நடைபெற்ற மூன்று கட்ட நேரடி பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.ரஷ்யாவின் நிபந்தனைகள் என்னவாக உள்ளன?
யுக்ரேன் நடுநிலையான நாடாக இருக்க வேண்டும்.ராணுவத்தை வெகுவாக குறைத்து அதன் நேட்டோ கனவுகளை கைவிட வேண்டும்.ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும்.ரஷ்யா பகுதியளவு கட்டுப்படுத்தி வரும் நான்கு பிராந்தியங்களிலிருந்து யுக்ரேன் தனது ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.எனினும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் அமெரிக்காவுக்கு உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
“ஐரோப்பிய தலைவர்கள் அமைதியை விரும்புகிறார்கள், புதினும் அமைதியை விரும்புகிறார் என நம்புகிறேன், ஜெலென்ஸ்கியும் அமைதியைக் காண விரும்புகிறார்” என டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க தலைவரைச் சந்திக்கும் புதின்
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது பற்றி வெள்ளை மாளிகையிலிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.கடந்த மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், யுக்ரேனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரஷ்யாவுடன் சாத்தியம் இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார், “எனக்கு அவரிடம் (புதினுடன்) ஏமாற்றம் தான், ஆனால் நான் விடப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.
சமீப நாட்களில் ரஷ்யாவுக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை கடினமாக்கியுள்ளார் டிரம்ப். யுக்ரேனுடன் ரஷ்யா போர் நிறுத்தம் மேற்கொள்ள ஆகஸ்ட் 8 ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்திருந்தார். அவ்வாறு நடக்கவில்லையென்றால் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது பற்றி வெள்ளை மாளிகையில் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை.
யுக்ரேன் போருக்குப் பிறகு முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் டிரம்பும் புதினும் தொலைபேசி மூலமாகப் பேசினார்கள்.
இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார் புதின்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு