மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த  சில ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது.

இந்த அகழ்வைத் தடுக்கவும், மக்களின் பூர்வீக நிலங்களையும் இருப்பையும் பாதுகாக்கவும் ‘கருநிலம் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் விழிப்புணர்வு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன் போது அரசியல் பிரதிநிதிகள், இளையோர் என பலரும் கலந்துகொண்டதுடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் முன்னெடுத்தனர்.