தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் விடுதலை நீர் சேகரிப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

முமிழ் சன சமூக நிலையத்தில் இடம்பெற்ற இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வுக்கு முன்னர் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

பின்னர் அராலிப் பகுதி மக்கள், சிறுவர்கள் ஆகியோர் தமது வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட விடுதலை நீரை பானையில் ஊற்றினார்.

குறித்த செயற்திட்டமானது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதலை நீர், விடுதலை மரம் ஒன்றினை நாட்டி வைத்து அந்த மரத்துக்கு ஊற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.