முல்லைத்தீவு  முத்துஜயன்கட்டு  பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர்  தாக்குதல் மேற்கொண்டதில்  ஒருவர் படுகாயம்  அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒருவர் காணாமல் போயிருந்தார் இந்நிலையில் காணாமல் போனவர் இன்று முத்துஜயன்கட்டு குளத்தில் இருந்து உடலமாக மீட்கப்பட்டிருந்தார் இவரையும் இராணுவமே கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்நிலையில் குறித்த இளைஞர்களை இராணுவ முகாமுக்கு அழைத்த குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று இராணுவத்தினர் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் 

முத்துஜயன்கட்டு  பகுதியில் இலங்கை இராணுவத்தின் 13 SLNG  இராணுவ முகாமை விட்டு இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்றனர் 

இந்நிலையில் குறித்த இராணுவ முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த சில  பொருட்களை இராணுவத்தினர் முகாமைசுற்றியுள்ள ஜீவநகர் கிராம  இளைஞர்களுக்கு வழங்குகின்ற செயற்பாடு  அண்மைய சில  நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது

அவ்வாறு பொருட்களை பெற்றுக் கொண்டிருந்த போது முகாமில் இருந்த பல இராணுவத்தினர் சேர்ந்து பொருட்களை பெறச் சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால்  துரத்தி துரத்தி  தாக்கியுள்ளனர் 

இதன்போது குளத்தில் குதித்து மூவர் தப்பி வந்துள்ளனர் மற்றையத இருவரில் ஒருவர் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் அங்கு சென்ற பொது மக்களால் இராணுவத்துடன் முரண்பட்டு  அவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் 

மற்றைய ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் உறவுகள் அவரை இராணுவத்தினர் கொலை செய்து விட்டதாக தெரிவித்திருந்தனர் 

இவ்வாறான பின்னணியில் மற்றைய  இளைஞர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு குளத்தில் போடப்பட்டிருக்கலாம் என்ற சிலர்  சந்தேகம் வெளியிட்ட நிலையில் நேற்றைய தினம் முழுவதும் மக்கள் குளத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் எனினும் குளத்தில் எந்த தடயமும்  காணப்படவில்லை

இந்நிலையில் இன்று (09) காலை முத்துஜயன்கட்டு குளத்தில் குறித்த காணாமல் போன குடும்பஸ்தரின் உடலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் உடலத்தை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் 

இதேவேளை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர் 

குறித்த சம்பவத்தில் முத்துஜயன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளமை   குறிப்பிடதக்கது.