ஆபரேஷன் சிந்தூர்: எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? – இந்திய விமானப்படை தலைவர் புதிய தகவல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்த ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த ராணுவ மோதலின்போது ஐந்து போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி பேசியுள்ளார்.

இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைகள் பற்றி விமானப் படை தலைவர் பேசினார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மே 6, 7 இரவு அன்று நடந்த தாக்குதலில் குறி வைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது.

பெங்களூருவில் நடைபெற்ற 16வது ஏர் சீஃப் மார்ஷல் எல் எம் கத்ரே சொற்பொழிவில் ஏபி சிங் கலந்து கொண்டார். அப்போது, இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை குறைந்தது ஐந்து பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் மற்றும் ஒரு பெரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பெரிய விமானம் எலிண்ட் (ELINT) அல்லது ஏஇடபிள்யு&சி (AEW&C) ஆக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

ஏபி சிங்கின் கூற்றுப்படி விமானம் தரையிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் குறிவைக்கப்பட்டது. இது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டதிலே தரையிலிருந்து வான் இலக்குகளைக் குறிவைக்கும் மிகப்பெரிய தாக்குதல் ஆகும் என்றார்.

’80-90 மணி நேரம் வரை நீடித்த உயர் தொழில்நுட்ப போர்’

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை ‘உயர் தொழில்நுட்ப போர்’ என்று விவரித்தார்.இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதலை ‘உயர் தொழில்நுட்ப போர்’ என்று அவர் விவரித்தார்.

“இது இந்தியா சண்டையிட்ட உயர் தொழில்நுட்ப போர் என நான் கூறுவேன். இதில் அவர்களின் (பாகிஸ்தான்) வான் பாதுகாப்பு அமைப்புக்கு மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தினோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்த இழப்புகளைப் பார்த்த பிறகு, இனியும் இதைத் தொடர்ந்தால் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தனர். இது உயர்மட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மே 7-10 வரை நடைபெற்ற ராணுவ மோதல் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மே 31 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், பாகிஸ்தான் உடனான மோதலின்போது இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்திருந்தார்.

இந்திய விமானங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய பாகிஸ்தானின் கூற்றையும் அவர் முற்றிலுமாக மறுத்தார்.

எனினும், கடந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் ‘ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது’ எனத் தெரிவித்தார். ஆனால், எந்த நாடுகளின் விமானங்கள் பாதிக்கப்பட்டன என டிரம்ப் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்னதாக ஐந்து இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்து வருகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு