இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த கணவன் மற்றும் மனைவி நேற்று புதன்கிழமை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் இருந்திருந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான இருவரும்1996 ஆம் ஆண்டு தலை மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு படகு மூலம் பயணம் செய்து தமிழ்நாட்டு  மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

அவ்வாறான நிலையில் விமான மூலம் யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில்  யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய குடி வரவு குடிவரவு  கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணைகளின் பின்னர் காவல்துறையினரிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.