Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
டெல்லியில் வீடுகளுக்குள் படையெடுக்கும் பாம்புகளால் அச்சத்தில் மக்கள் – தடுப்பது எப்படி?
பட மூலாதாரம், Wildlife SOS
படக்குறிப்பு, வசிராபாத்தில் உள்ள டெல்லி ஜல் போர்டு பகுதியில் நாகப்பாம்பை மீட்கும் வனவிலங்கு குழு.எழுதியவர், பிரேர்னா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர்
டெல்லியின் வானுயர்ந்த கட்டடங்கள், மேம்பாலங்கள், பரபரப்பான வாழ்க்கைச் சூழல் மற்றும் வாகன நெரிசல் நிறைந்த சாலைகளுக்கு மத்தியில் ஒரு கணம் நிற்பது கூட கடினம்.
அப்படி இருக்கையில், சாலையில் நடக்கும்போதோ அல்லது வீட்டுக்குள் இருக்கும்போதோ ஒரு பாம்பை எதிர்கொண்டால் என்ன செய்வது?
இது வெறும் தற்செயலாக நிகழும் சம்பவம் இல்லை.
டெல்லி, நொய்டா போன்ற நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன என்பது முற்றிலும் உண்மை. இதனை மழைக்காலங்களில் தெளிவாக உணரமுடியும்.
ஜூலை 28ம் தேதி, டெல்லியின் மிக நெரிசலான பகுதியான சாந்தினி சவுக்கில், சாலைக்கு நடுவில் ஒரு பாம்பை சிலர் பார்த்தனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
தேதஜூலை 31ம் தேதி, நொய்டாவில் உள்ள ஒரு உயரடுக்கு குடியிருப்பில் பாம்பு தென்பட்டதாக புகார் பதிவாகியது.
இவ்வாறு டெல்லி போன்ற நகரங்களில் பாம்புகள் தென்படுவது தனித்தனியாக நடக்கும் சம்பவங்கள் அல்ல.
ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், டெல்லியின் பல்வேறு இடங்களிலும் பாம்புகள் தென்பட்டுள்ளன.
இதனால் மக்கள் பயத்துடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி வனத்துறையும், டெல்லியில் முன்னணி வனவிலங்கு மீட்பு அமைப்பான வைல்ட்லைஃப் எஸ்ஓஎஸ்ஸும், மழைக்காலத்தில் பாம்புகளைப் பிடிக்க வேண்டி அதிகளவில் அழைப்புகள் வருவதாகக் கூறுகின்றன.
டெல்லியின் உயர்தர லுட்யன்ஸ் மண்டலம் முதல், குறைந்த வசதிகளுடன் அதிக மக்கள் வாழும் குடிசைப் பகுதிகள் வரை பல்வேறு இடங்களில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன.
வைல்ட்லைஃப் எஸ்ஓஎஸ்ஸின் நிலைத்தன்மை மற்றும் சிறப்புத் திட்ட இயக்குநர் வாசிம் அக்ரம், அழைப்பு வந்த நான்கு நிமிடங்களுக்குள் தனது குழு மீட்புக் கருவிகளுடன் அந்த இடத்துக்குச் செல்வதாகத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, நொய்டாவில் வசிக்கும் ராகுலின் வீட்டுப் பால்கனியில் ஒரு பாம்பு தென்பட்டுள்ளது.மழைக்காலத்தில் பாம்புப் பொந்துகள் தண்ணீரால் நிரம்புவதால், அவை குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி தென்படுவதாகக் கூறுகிறார் வாசிம்.
பாம்புகள் அதிக அளவில் தென்படுவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு அழைப்பு வந்தது.
“இது பாம்பு தொடர்பான அழைப்பு, உடனே செல்ல வேண்டும்,” என்கிறார் அவர்.
மீட்புப் பணியில் அவர்களுடன் செல்ல விரும்புவதாகக் கூறினோம். அடுத்த பதினைந்து நிமிடங்களில், 21 சென்ட்ரல் அவென்யூவில் உள்ள அமண்டா சேத்தின் வீட்டை அடைந்தோம்.
பட மூலாதாரம், Prabhat Kumar/BBC
படக்குறிப்பு, வனவிலங்கு SOS குழு ஒரு கடை அறையிலிருந்து ஒரு பாம்பை மீட்கிறது.அந்த வீட்டைச் சுற்றி ஏராளமான செடி, கொடிகள் இருந்தன.
பொருட்களைச் சேமித்து வைக்கும் அறையில் பாம்பு இருப்பதாக அமண்டா வைல்ட்லைஃப் எஸ்ஓஎஸ் குழுவிடம் தெரிவித்தார்.
வாசிமும் அவரது குழுவினரும் அந்த அறையிலிருந்து அனைத்து பொருட்களையும் கவனமாக அகற்றினர்.
பின்னர், ஒரு கட்டிலுக்குப் பின்னால் சுமார் மூன்று அடி நீளமுள்ள தங்க நிறப் பாம்பு தென்பட்டது.
இது விஷமற்ற ராஜ நாக வகை. அந்தப் பாம்பு பச்சை நிறப் பையில் வைக்கப்பட்டு, பின்னர் பெட்டியில் பாதுகாக்கப்பட்டது.
“விஷப் பாம்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவற்றைப் பார்த்தாலே பயம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் வீட்டில் ஒரு பாம்பு இருந்தது. அப்போதும் சரி, இப்போதும் சரி நாங்கள் உதவிக்காக மீட்புக் குழுவை அழைத்தோம், ஏனென்றால் பாம்புகளும் உயிரினங்கள் தான், அவற்றுக்கும் வாழ உரிமை உள்ளது,” என்கிறார் அமண்டா.
மீட்கப்பட்ட பாம்புகள் 24 முதல் 48 மணி நேரம் கண்காணிக்கப்படுகின்றன. அவை முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், ஜசோலா பட்டி வனவிலங்கு சரணாலயம் அல்லது டெல்லியிலுள்ள வேறு காட்டுப் பகுதியில் விடுவிக்கப்படுகின்றன என்கிறார் வாசிம்.
வனத்துறையின் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
பட மூலாதாரம், Prabhat Kumar/BBC
படக்குறிப்பு, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அடிக்கடி மீட்கப்படும் பாம்புகளில் ராயல் பாம்பும் ஒன்று.2021ம் ஆண்டு வரை, டெல்லியில் 90% பாம்பு பிடிக்கும் பணிகளை வைல்ட்லைஃப் எஸ்ஓஎஸ் அமைப்பு கையாண்டு வந்தது.
ஆனால், டெல்லி வனத்துறை தனியாக குழு அமைத்த பிறகு, அதிகமான பாம்புகள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை, நகரின் பல பகுதிகளில் இருந்து 157 பாம்புகளை அவர்கள் பிடித்துள்ளனர் என வனத்துறை கூறுகிறது.
இவற்றில் பெரும்பாலானவை விஷமற்ற பாம்பு வகைகள்.
டெல்லியில் மழைக்காலத்தின் போது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100 பாம்புகளை பிடித்துள்ளதாக வனவிலங்குத் துறை கூறுகிறது.
அதிக பாதிப்புக்கு உள்ளாவது யார்?
டெல்லியில் அடிக்கடி பாம்புகளைச் சந்திப்பவர்கள் துப்புரவு பணியாளர்களும், குடிசைகளில் வாழும் மக்களும்தான்.
டெல்லி மாநகராட்சியின் துப்புரவு பணியாளர் அமித், யமுனா புஷ்தா பகுதியில் வடிகாலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார் .
மழைக்காலத்தில் பாம்புகள் வெளியே வருவதால், ஆற்றங்கரைப் பகுதியை சுத்தம் செய்வது பெரும் சவாலாக இருப்பதாக அமித் கூறுகிறார்.
“ஆற்றங்கரையை சுத்தம் செய்ய இன்னும் பயமாக இருக்கிறது. மழைக்காலங்களில் யமுனை நதியின் நீர்மட்டம் உயரும்போது, பாம்புகளும் அதிகம் தென்படுகின்றன. இது நிறைய இடையூறுகளை ஏற்படுத்துகிறது. ஒரு வாரத்துக்கு முன் ஒரு பெரிய பாம்பைப் பார்த்தேன். அதனால், இதுபோன்ற காலங்களில் குச்சி போன்றவற்றை எடுத்துச் செல்கிறோம், பாம்பு வந்தால் அவை அதனை அகற்ற உதவும்.,” என்கிறார்.
பட மூலாதாரம், Prabhat Kumar/BBC
படக்குறிப்பு, அமித் போன்றவர்களுக்கு, மழைக்காலத்தில் பாம்புகளால் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.பாம்புகளை எதிர்கொள்வது, சிக்கலை மட்டுமல்ல, சில நேரங்களில், அவை பெரிய பிரச்னைகளையும் ஏற்படுத்துகின்றன.
துப்புரவுப் பணியாளர் ராஜேந்திரா கூறுகையில், தன்னுடன் பணிபுரியும் சக பணியாளர்கள் இருவர் பணியின்போது பாம்புக் கடிக்கு ஆளாகினர்.
பின்னர், சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் குணமடைந்தனர். ஆனால், தன்னைப் போன்றவர்கள் மழைக்காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.
“அதனால்தான் இந்த நேரத்தில் சாலையோரங்களில் உள்ள மரங்களையும் செடிகளையும் நாங்கள் தொடர்ந்து வெட்டி வருகிறோம், இதனால் பாம்புகள் அவற்றை தங்களது இருப்பிடமாக மாற்றாது” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Prabhat Kumar/BBC
படக்குறிப்பு, மழைக்காலத்தில் சுத்தம் செய்யும் போது சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர் ராஜேந்திரா கூறுகிறார்.இந்தியாவில் 310-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 66 இனங்கள் மட்டுமே விஷமுள்ளவை அல்லது லேசான விஷம் கொண்டவை.
அவற்றில் நான்கு முக்கிய இனங்கள் உள்ளன, அவை ‘பிக் ஃபோர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு இவை காரணமாகக் கருதப்படுகின்றன.
காமன் கிரெய்ட், இந்திய நாகப்பாம்பு, ரஸ்ஸல்ஸ் விரியன் மற்றும் ரம்பம் செதில் விரியன் ஆகியவை தான் அந்த நான்கு இனங்கள்.
துப்புரவுத் தொழிலாளர்களுடன் பேசிய பிறகு, கீதா காலனியில் உள்ள ஒரு குடிசைப்பகுதியை அடைந்தோம்.
அங்கு வசிக்கும் காஜல் எங்களிடம் கூறுகையில், இந்த சமயத்தில், பல இடங்களிலும் தண்ணீர் தேங்குவதால் பாம்புகள் வெளியே வரும் அபாயம் உள்ளது என்றார்.
மழைக்காலத்தில் பாம்புகளின் நடமாட்டம் இருப்பதால், முன்னெச்சரிக்கையாக தனது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்றும், தூங்கும் போது கொசு வலையைப் பயன்படுத்த மறப்பதில்லை என்றும் காஜல் கூறுகிறார்.
பட மூலாதாரம், Prabhat Kumar/BBC
படக்குறிப்பு, கீதா காலனியில் வசிக்கும் காஜல், மழைக்காலத்தில் எல்லா இடங்களிலும் பாம்புகள் தென்படுவதால் தனது குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்.பாம்புகள் மிகவும் கூச்ச சுபாவமுள்ள உயிரினங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை தங்கள் இயற்கையான வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் ஏன் உள்ளன? இதற்கான காரணங்களை அறிய, டெல்லி பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் கல்லூரியில் சுற்றுச்சூழல் ஆய்வுகள் உதவிப் பேராசிரியரான கௌரவ் பர்ஹாதியாவை சந்தித்தோம்.
பாம்புகள் அதிகளவில் தென்படுகின்றனவா?
பேராசிரியர் கௌரவ் பர்ஹாதியா, தனது சில நண்பர்களுடன் சேர்ந்து, ஐந்து-ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பாம்புகள் தென்படும் முறை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
உலகின் மதிப்புமிக்க அறிவியல் இதழ்களில் ஒன்றான நேச்சர் இதழில் வெளியான ஆய்வு, 2019 முதல் 2022 வரை டெல்லியில் பாம்புகள் அதிகமாக தென்பட்டது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் என்று கூறுகிறது.
இதற்கான காரணத்தை விளக்கிய பேராசிரியர் கௌரவ் பர்ஹாதியா, “மழைக்காலத்தில் பசுமை அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் பாம்புகளின் உணவு ஆதாரமான எலிகள், அணில்கள், பறவைகள் போன்றவை அதிகமாகின்றன. எனவே, பாம்புகள் வேட்டையாட அடிக்கடி வெளியே வருகின்றன. மேலும், மழைக்காலம் பாம்புகளின் இனப்பெருக்கத்துக்கு மிகவும் உகந்த நேரம்,” என்று விளக்கினார்.
பட மூலாதாரம், Nature.com
படக்குறிப்பு, டெல்லியில் பாம்புகள் தென்படும் விதம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.காலநிலை மாற்றம் பாம்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
பட மூலாதாரம், Prabhat Kumar/BBC
படக்குறிப்பு, கான்க்ரீட் கட்டடங்களால் நிறைந்து வரும் நகரங்களில் காடுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கௌரவ் விளக்குகிறார்.பெருநகரங்களில் பாம்புகள் அதிகளவில் காணப்படுவது, காலநிலை மாற்றத்தின் விளைவு என்று பேராசிரியர் கௌரவ் பர்ஹாதியா கருதுகிறார்.
இதுகுறித்து பேசிய அவர்,”மக்கள் பாம்புகள் அதிகம் தென்படுவதை அவற்றின் எண்ணிக்கை உயர்வதாக நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. பாம்புகள் அதிகம் காணப்படுவது காலநிலை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடையது. பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. அதனால், கோடையில் பாம்புகள் ஏசி வென்ட்கள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், குளியலறைகள் ஆகியவற்றிலிருந்து மீட்கப்படுவதை உங்களால் பார்க்க முடியும். ஏனென்றால் அவை குளிர்ந்த இடங்களில் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக்க முயல்கின்றன,” என்றார் .
கடந்த ஆண்டு, நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தின் வகுப்பறையில் ஏசி காற்றோட்டத்திலிருந்து ஒரு பாம்பு வெளியே வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அதைத் தவிர்ப்பதற்கான வழிகள்
எனவே பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும், என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, கான்க்ரீட் கட்டடங்களால் நிறைந்து வரும் நகரங்களில் காடுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறார் பேராசிரியர் கௌரவ் பர்ஹாதியா.
“புதிய காடுகளை உருவாக்க முடியாவிட்டால், ஏற்கெனவே உள்ள காடுகளை பாம்புகளுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். அதாவது, பாம்புகளுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் வகையில் காடுகளை அமைக்க வேண்டும்,” என்று பேராசிரியர் கௌரவ் பர்ஹாதியா கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு