Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
டிரம்பின் வரி விதிப்பால் சம்பளம் குறையுமா? சாமானிய மக்களை எப்படி பாதிக்கும்? எளிய விளக்கம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய சரக்குகள் மீது 50% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு நாடுகள் மீது வெவ்வேறு இறக்குமதி வரிகளை விதித்து வருகிறார். இது அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பை பாதுகாக்கவும் உதவும் என்று அவர் கூறிவருகிறார்.
எனினும், அவரது சர்வதேச வர்த்தக கொள்கை உலக பொருளாதாரத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறக்குமதி வரிகள் (traiff) என்றால் என்ன?
பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன.
அதாவது இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளின் மதிப்பு பத்து டாலர் என்று வைத்துக் கொள்வோம். அந்த பொருளுக்கு 10% இறக்குமதி வரி தீர்மானிக்கப்படுகிறது என்றால், அந்த பொருளின் மதிப்பில் 10% வரியாக வசூலிக்கப்படும். அதாவது, அந்த பொருளுக்கு ஒரு டாலர் வரி என்று அர்த்தம். எனவே, குறிப்பிட்ட பொருளின் விலை 11 டாலராக இருக்கும்.
இந்தியா உட்பட பல நாடுகளுக்கு டிரம்ப் இந்த வரிகளை அதிகரித்துள்ளார். அப்போது, சரக்குகளை இறக்குமதி செய்யும் விலை, அமெரிக்கா இறக்குமதியாளர்களுக்கு மேலும் அதிகரிக்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
உதாரணமாக ஏற்கெனவே 10% வரி இருந்த சரக்குகள் மீது கூடுதலாக 40% விதிக்கப்பட்டால், மொத்தம் 50% வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது 10 டாலர் மதிப்பிலான பொருளுக்கு 5 டாலர் வரி விதிக்கப்படும். எனவே, இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை, முன்பிருந்த 11 டாலரிலிருந்து 15 டாலராக அதிகரிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களை புதிய வரிகள் வெகுவாக பாதிக்கும் என்று கணிக்கப்படுகிறதுகூடுதல் வரியை யார் செலுத்துவார்?
வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் சரக்குகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இந்த வரியை செலுத்த வேண்டும். அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் போது, அந்த கூடுதல் விலையை அவர்கள் மொத்த வியாபாரிகள் அல்லது வாடிக்கையாளர்கள் மீது ஏற்றக்கூடும்.
அதாவது, 11 டாலருக்கு ஒரு பொருளை வாங்கி, 20 டாலருக்கு மொத்த விற்பனையாளருக்கு விற்று வந்தார் என்று வைத்துக்கொள்வோம். தற்போது அந்த இறக்குமதியாளர் கூடுதலாக செலுத்த வேண்டிய 4 டாலரை அப்படியே மொத்த விற்பனையாளர் தலையில் ஏற்றி, பொருளின் விலையை 24 டாலராக உயர்த்தக் கூடும். அல்லது அதன் ஒரு பகுதியை மட்டும் மொத்த விற்பனையாளரிடமிருந்து பெறக்கூடும்.
இவ்வாறு மொத்த விநியோக சங்கிலியிலும் இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை அதிகரிக்கும்.
இந்திய சரக்குகளுக்கு தற்போது 50% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, அமெரிக்க சந்தையில் இந்திய சரக்குகளின் விலை அதிகரிக்கும். அப்போது, அமெரிக்க இறக்குமதியாளர்கள் குறைந்த விலையில் அதே பொருளை வேறு எந்த நாட்டிலிருந்து வாங்கலாம் என்று யோசிப்பார்கள்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கணிசமான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், வேறு சந்தைகளை நோக்கி அமெரிக்க இறக்குமதியாளர்கள் செல்லும் போது அது இந்திய தொழில்களை பாதிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதிய வரிகளால் அமெரிக்காவில் இந்திய பொருட்களின் விலை அதிகரிக்கும்டிரம்ப் ஏன் இதை செய்கிறார்?
சரி, அமெரிக்க சந்தையில் விலை உயர்வுக்கு இட்டுச் செல்லும் இந்த வரிகளை டிரம்ப் ஏன் விதிக்கிறார்?
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை கூடும் போது, அமெரிக்கர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகம் வாங்குவார்கள், உள்நாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்று டிரம்ப் நம்புகிறார்.
மேலும், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்க டிரம்ப் முயல்வதாக கூறுகிறார். வர்த்தகப் பற்றாக்குறை என்பது, ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும். ஒரு நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பை விட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு கூடுதலாக இருந்தால் அது வர்த்தகப் பற்றாக்குறை எனப்படும்.
பல நாடுகளில் அமெரிக்க சரக்குகளுக்கு அதிகமான இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் கூறும் டிரம்ப், அதன் காரணமாகவே இந்த பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது என்கிறார். இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு 45 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளை பொறுத்து பல்வேறு நாடுகளுக்கும் அங்கிருந்து வரும் வெவ்வேறு சரக்குகளுக்கும் தனித்தனி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள வரிகள், அமெரிக்காவில் நுழையும் போது அதை இறக்குமதி செய்பவர் தான் செலுத்த வேண்டும் என்றாலும், இந்திய ஏற்றுமதியாளர்களை இது கணிசமாக பாதிக்கும்.
இந்திய சரக்குகளின் விலையை அமெரிக்க இறக்குமதியாளர்கள் குறைத்து கேட்பார்கள். பத்து டாலர் மதிப்பிலான பொருளை உதாரணமாக எட்டு டாலருக்கு கேட்கலாம். அப்போது அமெரிக்க இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டிய வரி சற்று குறையும்.
இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் தொழில்களை பொருத்து லாபம் குறையும், அல்லது நஷ்டம் ஏற்படும்.
இறக்குமதி செய்யப்படும் பொருளின் அளவைக் குறைக்கலாம். உதாரணமாக, இந்தியாவிலிருந்து 100 டன் பொருட்களை இறக்குமதி செய்து வந்தவர்கள், கூடுதல் வரி காரணமாக அதனை 50 டன்னாக குறைக்கலாம். இந்தியாவை விட குறைவான வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளிடமிருந்து பொருட்களை வாங்கலாம்.
உதாரணமாக அமெரிக்க சந்தையில் இந்திய தோல் பொருட்களுடன் போட்டியிடும் வியட்நாம் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளுக்கு முறையே 20% மற்றும் 19% வரிகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறையக்கூடும், அல்லது குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியிருக்கும் இந்தியாவில் வேலைவாய்ப்பு பாதிக்குமா?
டிரம்ப் விதித்த வரிகள் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிவிடுமா, அப்படி கையெழுத்தானால் வரிகள் குறைக்கப்படுமா என்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்கின்றன.
எனினும், ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது பிற நாட்டு வரிகள் அதிகரித்தால், அது உள்நாட்டில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று பொருளாதார நிபுணர் நாகப்பன் விளக்குகிறார்.
நேரடியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், ஜவுளி, தோல் உள்ளிட்ட துறைகள் இந்த வரிகளால் முதலில் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்.
“ஏற்றுமதியை நம்பியிருக்கும் துறைகளுக்கு தொழில் குறையும். இதனால், குறிப்பாக தொழிலாளர் அதிகமாக தேவைப்படும் துறைகளில், சம்பளம் குறையலாம், இந்த நிலை அதிக நாட்கள் நீடித்தால் வேலை இழப்பு ஏற்படலாம். அப்போது மக்களின் வாங்கும் சக்தி குறையும். அப்படியானால் இந்திய சந்தையில் குறிப்பாக FMCG (Fast Moving Consumer Goods) எனப்படும் நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் பொருட்களின் தேவை குறையும்” என்று அடுத்தடுத்து என்ன நடக்கக் கூடும் என்று விளக்குகிறார்.
அப்படி பொருட்களின் தேவை குறையும் போது பொருட்களின் விலை குறையும், அல்லது விலை உயர்வு இருக்காது என்று கூறும் நாகப்பன், அது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்கிறார். “மக்களிடம் பொருட்களின் தேவை அதிகரிக்கும்போது விலை குறைகிறது, அல்லது விலை உயர்வு கட்டுக்குள் இருந்தால் அது பொருளாதாரத்துக்கு ஆரோக்யமானது. மக்களிடம் பணம் இல்லாமல் அதனால் தேவை ஏற்படாமல் பொருட்களின் விலை குறைந்தால் அது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.” என்கிறார்.
எனினும் இந்த பாதிப்புகள் உடனடியாக இந்திய சந்தையில், வேலைவாய்ப்புகளில் இருக்காது என்கிறார் பொருளாதார நிபுணர் சேதுராமன். “ஏற்றுமதி-இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த காலத்துக்கான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை கணக்கில் ஏற்கெனவே எடுத்துக் கொண்டிருப்பார்கள். இந்தியாவில் உற்பத்தி செலவுகளில் மாற்றம் இல்லாததால் உடனடியாக, அடுத்த சில வாரங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதற்குள் நிலைமைகள் சீராகவும் வாய்ப்பிருக்கிறது, அதோடு இந்தியா ஐரோப்பிய சந்தையை நோக்கி நகரக்கூடும்” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஏற்றுமதியை சார்ந்துள்ள, தொழிலாளர்கள் அதிகமாக தேவைப்படும் இந்திய தொழில்களில் வேலை இழப்பு, சம்பள குறைவு வரும் நாட்களில் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்படுகிறது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு விலை அதிகரிக்குமா?
கூடுதல் இறக்குமதி வரிகளின் சுமையால் ஏற்கெனவே அமெரிக்காவில் விலை ஏற்றமடைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் விலைகள் 2.7% அதிகரித்தன, அதற்கு முந்தைய மாதம் 2.4% அதிகரித்திருந்தன. இதன் தாக்கம் காபி, ஆடைகள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்களில் பிரதிபலித்தது.
அடிடாஸ் – காலணிகளை பிரதானமாக தயாரிக்கும் நிறுவனம், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு தனது விலைகளை ஏற்றப்போவதாக அறிவித்துள்ளது.
அதே போன்று, மற்றொரு நிறுவனமான நைக், தனது செலவுகள் ஒரு பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்றும் அமெரிக்க சந்தையில் தனது பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பார்பி பொம்மைகள் தயாரிக்கும் மேட்டல் நிறுவனமும் கூட விலையை ஏற்ற திட்டமிட்டுள்ளது.
சில நிறுவனங்கள் தங்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். சந்தையில் பொருட்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும் விலைகள் ஏறும்.
வெளிநாட்டு பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கும் விலை ஏற்றம் இருக்கும்.
உதாரணமாக அமெரிக்காவில் கார்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அதன் பாகங்கள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா எல்லைகளை பல முறை கடந்து செல்கின்றன.
புதிய வரிகளால் எல்லைகளில் சுங்க சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதனால் கால தாமதமும் ஏற்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு