மேற்கு ஆபிரிக்க  நாடான கானாவில் இராணுவ ஹெலிகொப்டர்  ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் உள்ளிட்ட 08 பேர் உயிரிழந்துள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேற்கு ஆபிரிக்காவில் பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக அடையாளங்காணப்பட்டுள்ள சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக     அதிகாரிகள் நேற்று(06)  பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.