Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , யாழ் . மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் , நல்லைக்குமரன் மலர் வெளியீடும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 33ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றியமைக்காக கௌரவமாக வழங்கப்படும் யாழ் . விருது கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஓய்வு நிலை விரிவுரையாளர் சின்னத்தம்பி குணசீலனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ் . மாநகர ஆணையாளர் ச. கிருஷ்ணேந்திரன் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.