உத்தராகண்ட் மேக வெடிப்பு: பேரழிவை கண் முன்னே காட்டும் படங்கள்

பட மூலாதாரம், ANI

6 ஆகஸ்ட் 2025, 09:27 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேக வெடிப்பால் பெருமழை கொட்டியது. இதனால் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் (ஆழமான பள்ளம் அல்லது கால்வாய்) நீர் மட்டம் திடீரென உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், சில கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உத்தரகாசி ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா தெரிவித்தார்.

பட மூலாதாரம், X/@UttarkashiPol

பட மூலாதாரம், ANI

இந்தச் சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும், அவ்வப்போது நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI

“மேக வெடிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. தண்ணீரும் குப்பைகளும் மிக வேகமாக வந்துள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம். மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் முதலமைச்சர் தாமி தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI

“எனது வீட்டின் கூரையிலிருந்து பல ஹோட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டதை நான் கண்டேன். எங்கள் கிராமத்தில் உள்ள முழு சந்தையும் அழிக்கப்பட்டது,” என்று தாராலி கிராமத்தில் வசிக்கும் அஸ்தா பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என்றும், சம்பவம் நடந்த நேரத்தில் கிராம மக்கள் வழிபாட்டிற்காக சென்று கொண்டிருந்ததாகவும் கூறிய ஆஸ்தா, வெள்ளம் காரணமாக பலர் காணாமல் போயுள்ளதாகவும், கிராம மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு