குறுகிய நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் மேக வெடிப்பை முன்கூட்டியே கணிப்பதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், X/@UttarkashiPol

6 ஆகஸ்ட் 2025, 03:06 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

உத்தரகாசி மாவட்டத்தில் தராலி கிராமத்தில் உள்ள கீர் கங்கா கதேராவில் (ஆழமான பள்ளம் அல்லது வடிகால்) மேக வெடிப்பு காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் பல வீடுகளும், ஓட்டல்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இரண்டாவது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுபோன்ற மேக வெடிப்புகள் குறித்து வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை விடுக்க முடியுமா? இந்த நிகழ்வுகள் ஏன் ஏற்படுகின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன.

மேக வெடிப்பு என்பது என்ன?

பத்து செ.மீக்கு அதிகமான கன மழை, ஒன்று முதல் பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பெய்தால் அதனை மேக வெடிப்பு நிகழ்வு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேக வெடிப்புகள் ஒரே இடத்தில் நிகழக்கூடும். அப்படியான சூழலில், 2013-ம் ஆண்டு உத்தராகண்டில் நடந்தது போல உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்படும். ஆனால் கனமழை பெய்தாலே அது மேக வெடிப்பு என்று அர்த்தம் கிடையாது.

ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ கனமழை பெய்தாலே அது பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அர்த்தம் கிடையாது. ஆனால் மழை பெய்யும் பகுதியில் ஆறு அல்லது பெரிய நீர் நிலை இருந்தால், அது திடீரென அதிக அளவிலான நீரால் நிரம்புகிறது. அதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் சேதம் ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேக வெடிப்பை தற்போதுள்ள வானிலை எச்சரிக்கை அமைப்புகள் கொண்டு கணிப்பது கடினம். பருவமழை காலத்தில் மட்டும்தான் மேக வெடிப்பு நிகழுமா?

மேக வெடிப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் பருவமழைக் காலத்தில் தான் ஏற்படும். சில நேரங்களில் பருவமழைக்கு முன்பாகவும் ஏற்படலாம்.

குறிப்பாக வட இந்தியாவில், மே முதல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்த நிகழ்வுகள் ஏற்படுவதை கவனிக்க முடியும்.

மேக வெடிப்பை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

மேக வெடிப்பு நிகழ்வுகள் சிறிய அளவிலான பருவ மாற்றங்கள், ஒன்று முதல் பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஏற்படுவதால் உருவாகின்றன. எனவே இதனை கணிப்பது சிரமமாகும்.

பொதுவாக பெரும்பகுதியில் மிக கன மழை பெய்வதை ரேடார் மூலம் வானிலை ஆய்வு மையம் கணிக்கிறது. ஆனால் மேக வெடிப்பு எந்த குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் என்று கணிப்பது சிரமமாகும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மேக வெடிப்புகளை கணிக்க என்ன வேண்டும்?

மேக வெடிப்புகளை கணிக்க, அது அடிக்கடி நடைபெறும் இடங்களில் அடர்ந்த ரேடார் நெட்வொர்க் தேவை அல்லது சிறிய நிகழ்வுகளை கூட கணிக்கும் வகையிலான அதிநவீன வானிலை முன்னறிவிப்பு அமைப்புகள் தேவை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

மேக வெடிப்புகள் மலைப் பகுதிகளில் மட்டுமே ஏற்படுமா?

மேக வெடிப்புகள் சமநிலையான இடங்களிலும் ஏற்படக் கூடும் என்றாலும், இது பொதுவாக மலைப் பகுதிகளிலேயே அதிகம் நிகழ்கின்றன. ஏனென்றால் மலைப் பகுதிகள் மேகம் மேல் எழும்பி கனமழையை உருவாக்க ஏதுவாக இருக்கின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு