Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
6 ஆகஸ்ட் 2025, 14:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 25% வரியை டிரம்ப் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய அளவில் எரிசக்தியை வாங்கும் நாடாக இந்தியா உள்ளதால் இந்த வரி கூடுதல் வரி விதிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”இந்திய அரசு தற்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதை நான் காண்கிறேன்.” என டிரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக புதிய வரியும் செயல்படுத்தப்படும். டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின்படி, இந்தக் கூடுதல் வரி 21 நாட்களுக்குள் அமலுக்கு வரும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அமெரிக்காவின் இந்த முடிவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்துள்ளது
“நரேந்திர மோதியின் நண்பர் டிரம்ப், இந்தியாவின் மீது 50% வரி விதித்துள்ளார். டிரம்ப் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார், ஆனால் நரேந்திர மோதி அவரது பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை. நரேந்திர மோதி, தைரியமாக இருங்கள், டிரம்பிற்கு பதில் சொல்லுங்கள்” என்று காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது .
2022-ஆம் ஆண்டில் ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான போரை தொடங்கியபோது, பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை குறைத்தன. அதனைத் தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக மாறியது.
பட மூலாதாரம், Win McNamee/Getty Images
இந்தியாவின் விமர்சனம்
அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று (ஆகஸ்ட் 6) மாஸ்கோவில் சந்தித்த பிறகு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா 25% வரி வதித்தபோது இந்தியா கடும் விமர்சனங்களை வைத்திருந்தது.
“உலகளாவிய எரிசக்தி சந்தை நிலைத்திருக்க வேண்டும்” என்பதற்காக, ரஷ்யா-யுக்ரேன் மோதல் தொடங்கியபோது, அமெரிக்காதான் இந்தியாவை ரஷ்ய எரிவாயுவை இறக்குமதி செய்ய ஊக்குவித்தது என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
அத்துடன் ” எல்லா பெரிய பொருளாதார நாடுகளையும் போலவே, இந்தியா அதன் தேசிய நலன்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், “இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது மற்றும் நியாயமற்றது” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு