Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி மனித புதைகுழியில் அதிர்ச்சி தரும் வகையில் சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இதில் 140 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக இரண்டாம் கட்ட அகழ்வின் 32வது நாளான இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்காலிகமாக புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 22 மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கபடுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை எலும்புக்கூட்டு தொகுதியொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடனும் எலும்புக்கூடு தொகுதியொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதைகுழிகளில் இருந்து செருப்பு , தாயம் , காசு, உள்ளிட்ட சான்று பொருட்கள் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.