Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணியில் கட்டம் கட்டமாக 40 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 130 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 141 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணி மனிதப் புதைகுழிக்கு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சோமரத்ன ராஜபக்சவின் மனைவி செம்ணியில் சுமார் 300 பேரை தலையாட்டி மூலம் கொண்டுவரப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் சிறையில் உள்ள தனது கணவர் கொல்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில் பார்த்தேன்.
எம்மை பொறுத்தவரையில் சோம ரத்ன ராஜபக்ச ஒரு குற்றவாளி குற்றவாளி சில விடயங்களை கூறப்போவதாக அவரது மனைவி கூறுகிறார்.
ஆகவே அவர் என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் அவர் சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் ஆனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.