வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. 

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஓமந்தை சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

விசாரணைகளின் அடிப்படையில், தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 25.5 பவுண் தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவற்றின் பெறுமதி சுமார் 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். 

இளைஞனை தொடர்ந்து தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்