யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன் போது, பொதி செய்யப்பட்டு ஈரமான நிலையில் , கஞ்சா பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் எடை சுமார் 103 கிலோ (ஈரமான எடை) எனவும் , அவற்றின் பெறுமதி சுமார் 23 மில்லியன் ரூபாய் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவற்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.