Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) திடீரென ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கியதால், பலர் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேக வெடிப்பைத் தொடர்ந்து அங்கு திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் காவல்துறையினா், எஸ்.டி.ஆர்.எப், இராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது பெய்து வரும் இந்த பருவமழையால் அங்கு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தொிவிக்கப்படுகின்றது.
. நேற்று ஹல்த்வானி அருகே பக்ரா ஓடையின் பலத்த நீரோட்டத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதுடன் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) பூஜியாகட் அருகே பெரிய ஓடையில் இரண்டு பேர் மூழ்கி இறந்துள்ளனா்.
இரவு முழுவதும் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ருத்ரபிரயாகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது