Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட மறுத்த இந்திய முன்னாள் வீரர்கள் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது என்ன?
பட மூலாதாரம், Andy Kearns/Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கேப்டன் முகமது ஹஃபீஸ்2 மணி நேரங்களுக்கு முன்னர்
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL-டபிள்யூசிஎல்) குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB-பிசிபி) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் இந்தப் போட்டியில் பங்கேற்காது என்று அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
லாகூரில் நடந்த நிர்வாக தலைவர்களின் (Board of Governors) கூட்டத்துக்குப் பிறகு, உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டை மற்றும் பாரபட்சமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி பிசிபி ஒரு அறிக்கையை வெளியிட்டது. மேலும், எதிர்காலத்தில் அப்போட்டிக்கு தங்கள் அணியை அனுப்ப மாட்டோம் என்றும் பிசிபி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் குரூப் போட்டி இந்திய அணியுடன் விளையாடப்படாததால் பிசிபி வருத்தமடைந்தது, ஆனால் இதையும் மீறி, இந்திய அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. அரையிறுதியில் இந்திய அணி விளையாட மறுத்ததால், பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக, ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை பர்மிங்காமில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தென்னாப்ரிக்கா சாம்பியன்ஸ் அணி, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், தென்னாப்ரிக்காவுக்கு 20 ஓவர்களில் 196 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது, ஆனால் அந்த இலக்கை தென்னாப்ரிக்கா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டியது.
இந்த தனியார் டி-20 கிரிக்கெட் லீக்கில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் ஆறு அணிகள் அடங்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன சொன்னது?
பட மூலாதாரம், ARIF ALI/AFP via Getty Images
படக்குறிப்பு, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்விஞாயிற்றுக்கிழமை, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தலைமையில் லாகூரில் நிர்வாகிகள் குழுவின் கூட்டம் நடைபெற்றது.
“டபிள்யூசிஎல்-இன் இரட்டைத் தரநிலைகள் மற்றும் பாரபட்சமான அணுகுமுறை குறித்து கூட்டத்தில் ஆழ்ந்த ஏமாற்றமும் வலுவான எதிர்வினையும் வெளிப்படுத்தப்பட்டன” என்று பிசிபி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
மேலும், “சர்வதேச விளையாட்டுகளில் இத்தகைய இரட்டை மற்றும் பாரபட்சமான அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது, அதை பொறுத்துக்கொள்ள முடியாது. வெளிப்புற அழுத்தம் காரணமாக, விளையாட்டின் நியாயமான கொள்கைகள் மீறப்பட்டு, ஒரு வருத்தமான சூழ்நிலை எழுந்தது. எதிர்காலத்தில் இந்தப் போட்டியில் பங்கேற்க பிசிபி தனது அணியை அனுப்பாது” என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தப் போட்டியில், ஜூலை 20 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் இந்திய சாம்பியன்கள் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்கள் இடையே இரண்டு போட்டிகள் நடைபெறவிருந்தன. இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.
ஜூலை 20 அன்று நடந்த குழு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடவில்லை, அதே நேரத்தில் ஜூலை 31 அன்று நடந்த அரையிறுதியில் இந்தியா ஒரு பந்து கூட வீசாமல் பாகிஸ்தானுக்கு வெற்றியை விட்டுக்கொடுத்தது.
இந்தியா தனது திட்டமிடப்பட்ட போட்டிகளில், போட்டியில் பங்கேற்கும் மற்ற அனைத்து அணிகளுடனும் விளையாடியது, ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடவில்லை.
இதை பிசிபி தனது அறிக்கையில் குறிப்பிட்டு, “டபிள்யூசிஎல் வேண்டுமென்றே போட்டியில் விளையாடாத அணிக்கு புள்ளிகள் வழங்க ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்தது, இது விளையாட்டு மனப்பான்மைக்கு எதிரானது” என்று எழுதியது.
“குறுகிய அரசியல் மனப்பான்மை தாக்கம் செலுத்தும் போட்டியில் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க முடியாது” என்று பிசிபி கூறியது.
டபிள்யூசிஎல் நிர்வாகம் கூறியது என்ன?
பட மூலாதாரம், Gareth Copley/Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மிஸ்பா உல்-ஹக்ஜூலை 31 அன்று அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ குறித்து டபிள்யூசிஎல் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோவில், பாகிஸ்தான் அணியைப் பார்த்த பிறகு இந்திய அணி மைதானத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்டது.
இந்தக் கூற்றை மறுத்து , ஜூலை 20 அன்று நடந்த குழுப் போட்டியின் போதும், ஜூலை 31 அன்று நடந்த அரையிறுதிப் போட்டியின் போதும், “இந்திய அணி மைதானத்துக்கு வரவில்லை, இரு அணிகளின் உறுப்பினர்களும் மைதானத்தில் நேருக்கு நேர் சந்திக்கவில்லை” என்று டபிள்யூசிஎல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 30 அன்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், டபிள்யூசிஎல், “அரையிறுதியில் விளையாடாத இந்திய அணியின் முடிவை நாங்கள் மதிக்கிறோம், அதே நேரத்தில் பாகிஸ்தானின் விளையாடும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறியிருந்தது .
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”எல்லா காரணிகளையும் மனதில் கொண்டு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி ரத்து செய்யப்படுகிறது. இப்போது பாகிஸ்தான் இறுதிப் போட்டியை நோக்கி நகரும்.”
முன்னதாக, ஜூலை 20 அன்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையேயான குரூப் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு டபிள்யூசிஎல் மன்னிப்பு கேட்டது.
“இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மூலம் உலகுக்கு சில நல்ல நினைவுகளை உருவாக்க முடியும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், இந்தச் செயல்பாட்டில் நாம் பலரை காயப்படுத்தியிருக்கலாம். இதன் மூலம் இந்திய வீரர்களையும் சங்கடப்படுத்தியுள்ளோம்” என்று டபிள்யூசிஎல் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இது புண்படுத்தும் நோக்கில் செய்யப்படவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.”
போட்டிகள் ஏன் ரத்து செய்யப்பட்டன?
பட மூலாதாரம், Subaas Shrestha/NurPhoto via Getty Images
பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் காரணமாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்துவிட்டதாகவும், அதன் பிறகு அதை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விஷயத்தில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இந்த லீக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக எந்த போட்டியிலும் விளையாட மாட்டேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஜூலை 20 அன்று டபிள்யூசிஎல் அறிக்கைக்கு முன்பு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு இ-மெயிலின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துகொண்டார் .
இதனுடன், ஷிகர் தவான், “மே 11 அன்று நான் எடுத்து வைத்த அதே படியில் நான் இன்னும் நிற்கிறேன். என் நாடு எனக்கு எல்லாமே, நாட்டை விட எதுவும் பெரியதல்ல” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இ-மெயிலின் ஸ்கிரீன்ஷாட்டில், மே 11, 2025 அன்று, வரவிருக்கும் டபிள்யூசிஎல் லீக்கில் பாகிஸ்தானுக்கு எதிரான எந்தப் போட்டியிலும் பங்கேற்கப் போவதில்லை என்று ஷிகர் தவான் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனுடன், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமை தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு