Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இங்கிலாந்தின் வெற்றியை தட்டிப்பறித்த இந்திய அணி – கடைசி நாளில் சிராஜ் செய்த மாயாஜாலம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.4 ஆகஸ்ட் 2025, 11:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்
இங்கிலாந்து உடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்தில் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற டெஸ்ட் போட்டி என்கிற சாதனையும் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளும் கடைசி நாள் வரை சென்று முடிந்துள்ளன.
நான்காவது இன்னிங்ஸில் 374 ரன்கள் என்கிற இமலாய இலக்கை துரத்திய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜுக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் இரு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4வது நாளில் கேட்சை தவறவிட்டதற்காக விமர்சிக்கப்பட்ட சிராஜ். இன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார்.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சுக்காக முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில்லும் இங்கிலாந்து அணிக்கு பேட்டர் ஹாரி ப்ரூக்கும் தொடர் நாயகர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் மூலம் இந்த தொடரை 2-2 என்கிற கணிக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. நான்காவது நாள் முடியும் வரை ஒருதலைபட்சமாக இருந்தபோட்டி இந்தியாவின் அபார பந்துவீச்சால் வெற்றியாக மாறியது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஒருதலைபட்சமாக இருந்த போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறியது எப்படி?
ஐந்தாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்களும் இந்திய அணி வெற்றி பெற 4 விக்கெட்டுகளும் தேவைப்பட்டன. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே ஜேமி ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ்.
அதனைத் தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் எல்பிடபிள்யூ ஆனார். 12 பந்துகளைச் சந்தித்த ஜோஷ் டங் 0 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வீசிய ஃபுல் லெந்த் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து கையில் காயம் ஏற்பட்ட நிலையில் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார்.
ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில் மறுபுறம் கஸ் அட்கின்சன் நிலைத்து நின்று ஆடினார். இங்கிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 1 விக்கெட்டும் தேவை என்கிற நிலையில் ஆட்டம் இருந்தது.
சிராஜின் பந்து வீச்சில் சிக்ஸர் பறக்கவிட்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார் அட்கின்சன். அவர் அடித்த பந்து ஆகாஷ்தீபின் கடினமான கேட்ச் முயற்சியையும் கடந்து எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்று விழுந்தது.
கிறிஸ் வோக்ஸை ஸ்ட்ரைகர் எண்டிற்கு வரவைக்கக்கூடாது என்பதில் அட்கின்சன் குறியாக இருந்தார். பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிப்பது மட்டுமே அவருடைய இலக்காக இருந்தது. இரண்டு ஓவர்களில் கடைசி பந்தில் 1 ரன்கள் எடுத்து ஸ்ட்ரைகர் எண்டிற்கு வந்தார் அட்கின்சன்.
ஆனால் இந்த உத்தி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சிராஜ் வீசிய யார்க்கர் பந்தில் அட்கின்சனின் அட்டமிழக்க 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடரின் சர்ச்சையான தருணங்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த வோக்ஸ்முதல் இன்னிங்ஸில் என்ன நடந்தது?
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகித்தது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஐந்தாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸை இந்திய அணி தடுமாற்றத்துடனே தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஒரு பேஸ்ட்மென் மட்டுமே 50 ரன்களை (கருண் நாயர் – 57 ரன்கள்) கடந்திருந்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கினாலும் அது நிலைக்கவில்லை. தொடக்க வீரர்களான ஜாக் க்ராவ்லியும், பென் டக்கெட்டும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இருவரும் 100-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினர். ஆனால் வேறு எந்த பேட்டர்களும் நிலைத்து ஆடவில்லை. க்ராவ்லி அதிகபட்சமாக 64 ரன்கள் அடிக்க ஹாரி ப்ரூக் மட்டும் 53 ரன்கள் அடித்திருந்த நிலையில் 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சோபிக்காத இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிலைத்து ஆடியது. ஜெய்ஸ்வாலின் (119 ரன்கள்) மற்றும் ஆகாஷ்தீப்பின் அரை சதத்தால் (66 ரன்கள்) 396 ரன்களை குவித்தது. ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் தலா 53 ரன்கள் அடித்தனர்.
இரண்டாவது இன்ங்சில் இங்கிலாந்திற்கு 396 ரன்கள் இலக்காக இருந்தது. ஓவல் மைதானத்தின் வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
தொடரின் முந்தைய டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இரண்டாவது இன்னிங்ஸ்ல் சதமடித்து ஆட்டத்தை இங்கிலாந்துக்கு சாதகமாக மாற்றிய ஜோ ரூட்கிராலி மற்றும் கேப்டன் ஆலி போப் ஏமாற்றமளித்த போதிலும், நான்காவது நாள் ஆட்டத்தில் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் இணைந்து பெரிய இன்னிங்சை கட்டமைத்தனர். 83 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த பென் டக்கெட் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும் ஹாரி புரூக் ஜோ ரூட்டுடன் இணைந்து பார்ட்னர் ஷிப் அமைத்தார். ஒரு நாள் போட்டியைப் போன்று விளையாடிய புரூக் 98 பந்துகளில் 111 ரன்களைக் குவித்தார். இந்த இணை இங்கிலாந்து அணியை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு சேர்த்தது.
இவர்கள் இருவரின் விக்கெட்டுகளும் விழவே ஆட்டம் மீண்டும் சவாலான கட்டத்திற்குச் சென்றது. இந்நிலையில் கடைசி நாளில் சிராஜின் சவாலான பந்து வீச்சால் ஆட்டம் முழுமையாக இந்திய அணி பக்கம் திரும்பியது. இங்கிலாந்து அணி 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு