செம்மணி கொலையாளிகளுள் ஒருவனான சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது முன்னாள் துணை ஆயுதக்குழுக்களிடையேயும் பீதியை தோற்றுவித்துள்ளது.

கொலையாளியின் அறிவிப்பு செம்மணி விவகாரத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் புலிகளது யாழ்.வெளியேற்றத்தின் பின்னராக சந்திரிகா குமாரதுங்கவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு களமிறக்கப்பட்ட தமிழ் துணை ஆயுதக்குழுக்களும் அச்சங்கொண்டுள்ளன.