Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஒற்றை கையில் பேட்டிங் இறங்கிய வோக்ஸ் – கடைசி விக்கெட்டை சிராஜ் வீழ்த்தியது எப்படி?காணொளிக் குறிப்பு, சிராஜ் மாயாஜாலத்தால் இந்தியா த்ரில் வெற்றிஒற்றை கையில் பேட்டிங் இறங்கிய வோக்ஸ் – கடைசி விக்கெட்டை சிராஜ் வீழ்த்தியது எப்படி?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. நான்காம் நாள் முடிவில் 339/6 விக்கெட் இழந்து வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே இங்கிலாந்துக்கு தேவைப்பட்ட நிலையில் அவர்கள் கையில் நான்கு விக்கெட்டுகள் இருந்தன.
ஆனால் ஐந்தாம் நாள் தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்து கடைசி ஓவர் த்ரில்லராக போட்டி மாறியது. கடைசி கட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றிக்கும் இடையே இருந்தது ஒரே ஒரு விக்கெட் மட்டும்தான். களத்தில் கஸ் அட்கின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இருந்த நிலையில் க்றிஸ் வோக்சிற்கு கையில் அடிப்பட்டதால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆட்டத்தை தானே முடிக்க அட்கின்சன் போராடினார்.
மூன்றாவது டெஸ்டில் சிராஜ் தனது விக்கெட்டை பறிகொடுத்ததால் இந்தியா வெற்றியை இழந்த நிலையில் அதே சிராஜ்தான் இந்த போட்டியில் கடைசி விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறார். நான்காவது போட்டி டிராவில் முடிந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது.
இந்தியாவின் நட்சத்திர பவுலர் பும்ரா அணியில் இடம்பெறாத போதும் இந்திய அணி பவுலர்கள் கடைசி நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு