யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

  நல்லூர் ஆலயம்பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியஹரினி அமரசூரிய