காண்டாமிருகத்தின் கொம்புகளுக்குள் கதிரியக்கப் பொருளை செலுத்தும் ஆய்வாளர்கள் காணொளிக் குறிப்பு, தென்னாப்பிரிக்கா: வேட்டைக்காரர்களைத் தடுக்க காண்டாமிருகங்களின் கொம்புகளில் கதிரியக்கப் பொருள்காண்டாமிருகத்தின் கொம்புகளுக்குள் கதிரியக்கப் பொருளை செலுத்தும் ஆய்வாளர்கள்

3 ஆகஸ்ட் 2025, 01:47 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்னாப்பிரிக்காவில் காண்டாமிருகங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, கொம்புகளுக்குள் சிறிய அளவு கதிரியக்கப் பொருளை ஆய்வாளர்கள் செலுத்துகிறார்கள்.

“சிறிய அளவில், காண்டாமிருகத்தின் கொம்பில் கதிரியக்கப் பொருள் செலுத்துவதால், அது யாராலும் அணைக்க முடியாத ஒரு பெரிய பிரகாசமான ஒளியை கொம்பில் செலுத்துவது போன்றது.”ரைசோடோப் திட்டத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஜேம்ஸ் லார்கின்.

“கதிரியக்கத் தன்மை கொண்ட கொம்பை விமான நிலையம், துறைமுகம், சுங்க அலுவலகம், என எந்த வழியாகவும் எடுத்துச் செல்ல முடியாது. சைரன்கள் ஒலிக்கும்.” என ரைனோ ஆர்ஃபனேஜ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்ரி வான் டெவென்டர் கூறுகிறார்.

இது காண்டாமிருகங்களுக்கு பாதிப்பில்லாத செயல்முறை என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகிலேயே அதிக காண்டாமிருகங்களை கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவை அங்கு வேட்டையாடப்படுகின்றன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு