Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அணுசக்தி நீர்மூழ்கிகள்: டிரம்ப் அச்சுறுத்தலுக்கு ரஷ்யாவின் எதிர்வினை என்ன?காணொளிக் குறிப்பு, சமூக வலைத்தள மோதல் அணு ஆயுத அச்சுறுத்தலாக மாறுகிறதா?அணுசக்தி நீர்மூழ்கிகள்: டிரம்ப் அச்சுறுத்தலுக்கு ரஷ்யாவின் எதிர்வினை என்ன?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சமூக ஊடகத்தில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதம் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அணு ஆயுத மோதலை தூண்டுகிறதா?
ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவின் சமூக வலைதள பதிவுகளால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவை நோக்கி நகர்த்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு ரஷ்யா எப்படி எதிர்வினையாற்றும்? அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான அணு ஆயுத மோதலின் பாதையில் நாம் தற்போது இருக்கிறோமா?
ரஷ்யா காட்டும் ஆரம்பகட்ட எதிர்வினைகளை வைத்து பார்த்தால் அப்படி இல்லை என்கிறார் பிபிசி ரஷ்ய ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசியில் அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தொடர்பான டிரம்பின் அறிவிப்பை பெரும்பாலான ரஷ்ய செய்தி ஊடகங்கள் நிராகரித்துள்ளன.
மாஸ்கோவ்ஸ்கி கம்சமோலட்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ராணுவ ஆய்வாளர் ஒருவர் டிரம்ப் பிடிவாதம் காட்டுவதாக கூறி உள்ளார்.
ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல், கொம்மர்சண்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து பேசுவது அர்த்தமற்ற உளறல். அதன் மூலம் அவர் உற்சாகம் அடைகிறார் என கூறி உள்ளார்.
அதே நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் டிரம்ப் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து எந்த உத்தரவையும் வழங்கவில்லை என உறுதியாக கூறுகிறேன் என ஒரு ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் கூறி உள்ளார்.
2017-ம் ஆண்டு, வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பியதாக டிரம்ப் கூறியதையும் கொம்மர்சண்ட் செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்பின் சிறிது காலத்திலேயே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் டிரம்ப் சந்திப்பு நடத்தினார்.
எனவே நீர்மூழ்கிக் கப்பல்களை டிரம்ப் நகர்த்துவது குறித்த சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு முன்னோட்டமா? நான் அப்படி நினைக்கவில்லை என குறிப்பிடும் ஸ்டீவ் ரோசன்பெர்க், டிரம்பின் இந்த முடிவு தொடர்பாக ரஷ்யாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த எதிர்வினையும் வராததை கண்டு ஆச்சரியமடைகிறார்.
ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்காவிற்கு அருகில் நிலைநிறுத்தப்படுவது குறித்த எந்த அறிவிப்பையும் நான் பார்க்கவில்லை. இது நிலைமையை ரஷ்யா இன்னும் ஆராய்ந்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது அல்லது இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை என கருதுகிறது என்பதையே குறிக்கிறது என்கிறார் ஸ்டீவ் ரோசன்பெர்க்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு