Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அணுசக்தி நீர்மூழ்கி நகர்வு: அமெரிக்கா – ரஷ்யா அணு ஆயுத மோதலுக்கு வழிவகுக்குமா? ஓர் அலசல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின்எழுதியவர், ஸ்டீவ் ரோசென்பெர்க் பதவி, ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோவிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சமூக ஊடகத்தில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதத்தால் அணு ஆயுத மோதல் தூண்டப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறையா?
ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவின் சமூக வலைதள பதிவுகளால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவை நோக்கி நகர்த்த உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு ரஷ்யா எப்படி எதிர்வினையாற்றும்? அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான அணு ஆயுத மோதல் உடனடியாக நிகழக் கூடிய ஒன்றாக உள்ளதா? இது, 1962ம் ஆண்டில் நிகழ்ந்த கியூபா ஏவுகணை நெருக்கடியின் இணைய யுக வடிவமாக உள்ளதா?
ரஷ்யாவின் ஆரம்பக்கட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் நான் அவ்வாறு இல்லை என சந்தேகிக்கிறேன்.
டிரம்பின் அறிவிப்பை ரஷ்ய செய்தி ஊடகங்கள் நிராகரித்துள்ளன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மாஸ்கோவ்ஸ்கி கோம்சோமோலெட்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ராணுவ ஆய்வாளர் ஒருவர் டிரம்ப் “பிடிவாதம் காட்டுவதாக” கூறுகிறார்.
ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கூறுகையில், அமெரிக்க அதிபர் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து பேசுவது, “அர்த்தமற்ற உளறல். அதன் மூலம் அவர் உற்சாகம் அடைகிறார்.” என்றார்.
“டிரம்ப் (நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து) எந்த உத்தரவையும் வழங்கவில்லை என உறுதியாக கூறுகிறேன்,” என ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் அப்பேட்டியில் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
2017-ம் ஆண்டு, வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பியதாக டிரம்ப் கூறியதையும் அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்பின் சிறிது காலத்திலேயே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் டிரம்ப் சந்திப்பு நடத்தினார்.
நீர்மூழ்கிக் கப்பல்களை நகர்த்துவது குறித்த சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இருக்குமா?
நான் அவ்வளவு தூரம் செல்ல மாட்டேன்.
ஆனால், ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வரும் எதிர்வினைகள் சுவாரஸ்யமாக இருக்கும்.
ரஷ்ய அதிபர் மாளிகையிடமிருந்தோ அல்லது வெளியுறவு அமைச்சகம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்தோ இந்த கட்டுரையை எழுதும் வரை எவ்வித கருத்தும் வரவில்லை.
ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக நிறுத்தப்படுவது குறித்தும் நான் எவ்வித அறிவிப்பையும் பார்க்கவில்லை.
இது, ரஷ்யா இன்னும் இந்த சூழல் குறித்து ஆராய்ந்து வருகிறது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது என கருதலாம், அல்லது எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கலாம்.
எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என ரஷ்யா நினைப்பதாகவே, முன்பு நான் குறிப்பிட்ட ரஷ்ய ஊடகங்களில் வெளியான எதிர்வினைகள் உணர்த்துகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் கருத்து மோதல்களுக்குப் பிறகு, கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பலமுறை சந்தித்தனர்.டிரம்ப் – மெத்வதேவ் கருத்து மோதல்
டிரம்ப் கடந்த சில தினங்களாகவே சமூக ஊடகத்தில் மெத்வதேவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்.
யுக்ரேனுடனான போரை நிறுத்துவதற்கு தான் அளித்த 50 நாட்கள் காலக்கெடுவை டிரம்ப் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களாக மாற்றினார். இதையடுத்து, மெத்வதேவ் தன் சமூக வலைதள பக்கத்தில் “டிரம்ப் ரஷ்யாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து விளையாடுகிறார்… ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல், போரை நோக்கிய ஒரு நகர்வு” என தெரிவித்திருந்தார்.
டிரம்ப் அதற்கு, “தோல்வியடைந்த, தான் இன்னும் ஆட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவிடம், தன் பேச்சில் கவனமாக இருக்குமாறு கூறுங்கள். அவர் மிகவும் ஆபத்தான பிரதேசத்துக்குள் நுழைகிறார்” என தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் (வலது) சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் டொனால்ட் டிரம்புடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார் இதற்கு மெத்வதேவ் தனது அடுத்த பதிவில், சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பான தானியங்கி அணு ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பான “டெட் ஹேன்ட்” (Dead Hand) பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
2008 முதல் 2012 வரை ரஷ்ய அதிபராக மெத்வதேவ் இருந்தபோது, அவர் ஒப்பீட்டளவில் ஒரு தாராளவாத ஆளுமையாக பார்க்கப்பட்டார்.
“சுதந்திரம் இல்லாமல் இருப்பதை விட சுதந்திரம் சிறந்தது,” என்பது அவருடைய பிரபலமான மேற்கோளாகும்.
ஆனால், நாளடைவில் அவர் ஆக்ரோஷமானவராக மாறிவருகிறார். குறிப்பாக, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கு பிந்தைய கால கட்டத்தில் அதிரடியான, மேற்கு நாடுகளுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகளுக்காக அவர் அறியப்படுகிறார். ரஷ்ய அதிபர் மாளிகையின் குரலாக பார்க்கப்படாததால், அவரது பல கருத்துகள் கவனிக்கப்படாமல் இருந்தன.
அமெரிக்க அதிபரால் அவருடைய கருத்துகள் திடீரென கவனிக்கப்பட்டன.
கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், டிரம்பின் எரிச்சலுக்கும் அவர் ஆளானார்.
சமூக ஊடக பதிவை ஒருவர் விரும்பாமல் இருப்பது வேறு விஷயம். நாம் எல்லோரும் அதில் இருக்கிறோம்.
ஆனால், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது வரை செல்வது மிகையான ஒன்றாக உள்ளது.
டிரம்ப் ஏன் அப்படி செய்தார்?
ஆனால், டிரம்ப் ஏன் அவ்வாறு செய்தார்?
நியூஸ்மேக்ஸுக்கு டிரம்ப் இதுகுறித்து தன் விளக்கத்தை அளித்துள்ளார்: அதில், “மெத்வதேவ் அணு ஆயுதங்கள் குறித்து மோசமான சில விஷயங்களை பேசியுள்ளார். அணு ஆயுதம் உச்சபட்ச எச்சரிக்கையாக இருப்பதால், அந்த வார்த்தையை குறிப்பிடும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால், சமூக ஊடகம் வாயிலாக அணு ஆயுத போருக்கு அச்சுறுத்துவதாக மெத்வதேவ் மீது நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது. இது புதிதல்ல.
மெத்வதேவின் சமீபத்திய பதிவுகளை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு டிரம்ப் எதிர்வினையாற்றியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இதுவொரு வியூகமாகவும் இருக்கலாம். டிரம்பின் வணிகத்திலும் அரசியலிலும் அவர் காரியமாற்றும் விதத்தில், கணிக்க முடியாத தன்மை உள்ளது; பேச்சுவார்த்தைக்கு முன் அல்லது பேச்சுவார்த்தையின் போது போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளின் சமநிலையை குலைக்கக் கூடிய எதிர்பாராத முடிவுகளை எடுப்பது அவருடைய வியூகமாக உள்ளது.
யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது என்கிறது அவரது உறுதிமொழி ஓர் உதாரணமாகும்.
நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வு, இதன்கீழ் வரலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு