மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் எடுத்த தீவிரமான முடிவுகளுக்காக பிற்காலத்தில் ஆபத்துக்களை சந்திக்க நேரிடலாம் எனவும் சுட்டிக்காட்டிய நாமல், இதனால் அவர்களுக்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

தற்போது, மகிந்த குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வலுக்கட்டாயமாக அல்லாமல் அரசியலமைப்பு உரிமையின் அடிப்படையில் தங்கியுள்ளார். இருப்பினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறிய பிறகு, அவர் இல்லத்தை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக நாமல் கூறியுள்ளார்.