மறைந்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நண்பருமான ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் மறைந்தார்.

வடமாகாண கௌரவ ஆளுநரின் முன்னாள் உதவிச் செயலாளர், முன்னாள் பிரதித்திட்டப் பணிப்பாளர் _ திட்டமிடல் செயலகம் வடக்கு மாகாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபர் என நெருக்கடியான காலகட்டத்தில் அவர் தனது பணிகளை ஆற்றியிருந்தார்.

இல. 42,கோவில் வீதி ஒழுங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அன்னாரின் பூதவுடல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04ம் திகதி  திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நெடுந்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 05ம் திகதி  செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொள்ளப்பட்டு தொடர்ந்து நெடுந்தீவு கிழக்கு கட்டுராமன்சல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.