பெண்களின் படங்களை ஆபாசமாக பயன்படுத்திய யூடியூப் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை

பெண்ணொருவரின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, ஆபாசக் கதைகளைப் ஒளிபரப்பிய யூடியூப் சனல் உரிமையாளருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை 05 ஆண்டுகளுக்கு நீதிமன்று ஒத்திவைத்துள்ளனர். . 

கொழும்புப் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கை நீதிமன்றில் தாக்கல் செய்தது. 

அது தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் , யூடியூப் சேனல் உரிமையாளரை குற்றவாளியாக கண்ட மன்று , 06 மாத சிறை தண்டனை விதித்து , அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.