கனேடிய பொருட்களுக்கான வரியை 35 சதவீதமாக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில்,  மார்ச் மாதத்திலிருந்து 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டண விகிதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் உயரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு கார்னியின் அலுவலகத்திலிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை.

அமெரிக்காவின் இரும்பு  மற்றும் அலுமினியம் மீது 50 சதவீத வரிகளை விதித்து கனடா பதிலடி கொடுக்க வேண்டும் என ஒன்ராறியோ பிரதமர் டக் ஃபோர்டு கூறினார்.

சரியான ஒப்பந்தத்தைத் தவிர வேறு எதற்கும் கனடா திருப்தி அடையக்கூடாது என்று ஃபோர்டு சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் கூறினார். இப்போது புரண்டு படுக்க வேண்டிய நேரம் இல்லை. நாம் நம் நிலைப்பாட்டில் நிற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.