Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடத்தல் சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை(31) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
-தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை(31) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகி ய நிலையில்,வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (31)மாலை மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,காட்டாஸ்பத்திரி பகுதியில் குறித்த பேருந்தை வழிமறித்த ஒரு குழுவினர் குறித்த பேருந்தில் ஏறி கூறிய ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி,குறித்த நபரை தாக்கி பேருந்தில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற நிலையில் கடுமையாக தாக்கிய நிலையில் விடுத்ததாக கூறப்படுகிறது.
காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற குழுவினரே குறித்த நபரை நடத்தியதாக தொிவிக்கப்படுகின்ற நிலையில் கடத்தியமைக்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.
காட்டாஸ்பத்திரி கிராமத்தில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் பேசாலை காவல்துறையினா் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.