Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது.
யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை , அவரது வீட்டிற்கு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர்.