அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா – பட்டியலில் மேலும் இரண்டு நாடுகள்காணொளிக் குறிப்பு, அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட நாடுகள் எவை?அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா – பட்டியலில் மேலும் இரண்டு நாடுகள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

1960களில் ஐந்து நாடுகள் அணுஆயுதங்களை வைத்திருந்தன. அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சங்களுக்கு மத்தியில், ஐ.நா. அணுஆயுதப் பரவலைத் தடுக்க ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியது.

அது “அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் 1960களில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளில் மூன்று இன்று வரையும் கையெழுத்திடவில்லை.

“இஸ்ரேல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் ஒருபோதும் இணைந்ததில்லை. அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் இணையாமல் இருந்ததன் மூலம் ஒரு சட்ட ஓட்டையை பயன்படுத்தி, தாங்கள் விரும்பினால் அணு ஆயுதங்களை உருவாக்கும் வாய்ப்பை வைத்திருந்தனர்.” என்கிறார் ஆயுதக் கட்டுப்பாடு நிபுணர் பாட்ரிசியா லூயிஸ்.

முதலில் அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், 2003ஆம் ஆண்டு வடகொரியா அதிலிருந்து வெளியேறியது. இதற்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியா நடத்திய கூட்டுப் படைபயிற்சிகளைக் காரணமாகக் கூறியது.

வடகொரியா இனி தங்களுக்கு ஆய்வாளர்கள் தேவையில்லை என்று முடிவெடுத்தது. அதனால் அவர்களை வெளியேற்றிவிட்டு, பின்னர் அணு ஆயுதங்களை பரிசோதித்தது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு