Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் எலும்புக்கூடுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த சிறீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கான் இயந்திரத்தின் மூலம் ஓகஸ்ட் 4ஆம் திகதி பரிசோதனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சிந்;துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாய்வில் இருந்து, இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இன்றைய தினமான வியாழக்கிழமை மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 105 எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அப்பகுதிகளிலியே ஸ்கேனிங் ஆய்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் தொடங்க உள்ளது.
இதனிடையே சம்பூர் மனித புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று புதைகுழி பகுதிக்கு நேரில் பயணித்து ஆய்வு செய்துள்ளது.