Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உத்தரப்பிரதேசத்தில் டிரோன் மூலம் வீடுகளை நோட்டமிட்டு திருட்டா? தூக்கமின்றி காவல் காக்கும் மக்கள்!
படக்குறிப்பு, உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வானில் காணப்படும் டிரோன்களால் சிரமப்படுகிறார்கள்.எழுதியவர், சையத் மோசிஸ் இமாம்பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தின் ஃபத்தேபூர் மாஃபி கிராமத்தில் நள்ளிரவு நெருங்கிவிட்டது. ஆனால் மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்.
அவர்கள் கைகளில் கம்புகள் போன்ற ஆயுதங்களும் உள்ளன.
கடந்த சில வாரங்களாக, கிராம மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்து காவல் காத்து வருகின்றனர்.
கிராம இளைஞர்கள் தெருக்களிலும் வயல்களிலும் சிறு குழுக்களாக ரோந்து செல்கின்றனர். ஆனால் அவர்களின் கண்கள் தரையில் அல்ல, வானத்தில் உள்ளன.
ஒரு இளைஞனிடம் அங்கே என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, “டிரோன்களை” என்கிறார் அந்த இளைஞர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த டிரோன்கள் திருடர்களுக்கு உதவுவதாக கிராம மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஆனால், டிரோன்களுக்கும் திருட்டு சம்பவங்களுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மொராதாபாத் எஸ்பி குமார் ரன்விஜய் சிங் கூறுகையில், “வேறொரு வகையான போக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது.மு தலில் சம்பல், பின்னர் அம்ரோஹா, பின்னர் மொராதாபாத் ஆகிய இடங்களிலிருந்து டிரோன்களைப் பார்த்ததாக புகார் வந்தது. இப்போது ராம்பூரிலிருந்தும் இதுபோன்ற தகவல்கள் பெறப்படுகின்றன” என்றார்.
உலகம் முழுவதும் கண்காணிப்பு, விநியோகம் மற்றும் அவசர சேவைகளுக்கு டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் அம்ரோஹாவில் உள்ள ஃபத்தேபூர் கிராம மக்கள் இந்த தொழில்நுட்பத்தின் வித்தியாசமான மற்றும் கவலையளிக்கும் பக்கத்தைக் காண்கிறோம் என்று கூறுகிறார்கள்.
இது திருடர்களின் முன் கண்காணிப்பாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். முதலில் டிரோன் பறக்கிறது, பின்னர் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் தென்படுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
டிரோன் மூலம் கண்காணித்துவிட்டு பின்னர் திருட்டு நடக்கிறதா ?
மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் டிரோன்கள் குறித்து கிராம மக்களிடையே அச்சமும் சந்தேகமும் அதிகரித்து வருகிறது.
மக்கள் தங்கள் பகுதியில் முதலில் டிரோன்களைப் பயன்படுத்தி கண்காணித்த பின்னர் திருட்டு நடப்பதாக நம்புகிறார்கள்.
பிஜ்னோர், அம்ரோஹா மற்றும் மொராதாபாத் ஆகிய பல கிராமங்களில், மக்கள் இப்போது இரவில் விழிப்புடன் உள்ளனர்.
அம்ரோஹாவில் உள்ள மிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சியா கூறுகையில், “முதலில் டிரோன் வருகிறது, அதன் பிறகு கிராமத்தைச் சுற்றி சில சந்தேகத்திற்கிடமான நபர்கள் காணப்படுகின்றனர்”என்கிறார்.
இருப்பினும், காவல்துறை மக்களிடையே காணப்படும் இந்த அச்சத்தை நிராகரிக்கிறது.
“டிரோன்களுக்கும் திருட்டுகளுக்கும் இடையே எந்த தொடர்பும் நிறுவப்படவில்லை. அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் அவற்றுக்கும் டிரோன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை”என்கிறார் அம்ரோஹா காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த்.
படக்குறிப்பு, மேற்கு உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் டிரோன்களின் காரணமாக அச்சம் நிலவுகிறது.இரவு நேரங்களில் விழித்திருக்கும் கிராம மக்கள்
அம்ரோஹா மாவட்டத்தின் ஃபத்தேபூர் மாஃபி கிராமத்தில் டிரோன்கள் மற்றும் திருட்டின் மீதான பயத்தின் காரணமாக, கிராம மக்கள் இரவில் கம்புகளுடன் ரோந்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இப்போது கிராமத்தில் உள்ள மக்கள் வெவ்வேறு குழுக்களை உருவாக்கி இரவு முழுவதும் கண்காணிக்கிறார்கள்.
நாங்கள் கிராமத்தில் இருந்தபோது, அருகிலுள்ள கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருப்பதாக சிலருக்கு தகவல் வந்தது.
கிராம மக்களுடன் நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே அங்கு இருப்பதைக் கண்டோம்.
சந்தேகத்திற்கிடமான சிலர் மோட்டார் சைக்கிளில் வந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஓடிவிட்டனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, கிராமவாசிகள் வேறு திசையில் தேடச் சென்றனர். ஆனால், அவர்கள் தேடிய சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
“நேற்று மக்கள் டிரோன்களை பார்த்தார்கள். அவை கிராமத்தின் மீது வட்டமிட்டுக்கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு, கிராமத்தின் மறுபக்கத்திலிருந்து சிலர் வருவதைக் கண்டார்கள், ஆனால் மக்கள் விழித்திருப்பதைக் கண்டு அவர்கள் திரும்பினர்” என்று சம்பவ இடத்தில் இருந்த சல்மான் இதுகுறித்து கூறினார்.
படக்குறிப்பு, மிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சியா, வானத்தில் காணப்படும் ட்ரோன்கள் திருட்டுக்குப் பயன்படுத்தப்படுவதாக உணர்கிறார்.பறக்கும் டிரோன்கள் மூலம் முதலில் கவனம் திசை திருப்பப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.
மக்கள் டிரோனை நோக்கி ஓடியதும், கிராமத்தில் அமைதி நிலவுகிறது, இதை திருடர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிர்பூர் கிராமத்திலும், மக்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள்.
இரவு நேரங்களில், பெண்கள் கூட தங்கள் வீடுகளுக்கு வெளியே அமர்ந்திருக்கிறார்கள்.
கிராமத்தைச் சேர்ந்த யசோதா கூறுகையில், “நாங்கள் பல நாட்களாக இரவில் வெளியே அமர்ந்திருக்கிறோம். பயம் நிலவுகிறது. டிரோன்கள் பறக்கின்றன, ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என்கிறார்.
“காவல்துறையினர் கிராமத்திற்கு அரிதாகவே வருவார்கள். நாங்கள் அழைக்கும்போது தான் அவர்கள் வருவார்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் வெளியே வசிக்கிறார்கள், அதனால் நாங்கள் இன்னும் பயப்படுகிறோம்” என்று கூறுகிறார் ராஜ்குமாரி.
பலர் தங்களது மொபைல் போன்களில் எடுக்கப்பட்ட டிரோன்களின் வீடியோக்களையும் காட்டினர்.
சாகிப் என்ற கிராமவாசி, “என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது, ஆனாலும் இரவு முழுவதும் விழித்திருந்து காவல் காக்க வேண்டும். டிரோன்கள் இல்லை என்று சொல்பவர்கள் ஒரு பெரிய அசம்பாவிதத்துக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
அம்ரோஹா, மொராதாபாத் மற்றும் பரேலி கிராமங்களில் பரவியுள்ள அச்சம்
படக்குறிப்பு, பல கிராமங்களில், மக்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள்.அம்ரோஹாவைத் தவிர, மொராதாபாத்தில் உள்ள மக்களும் டிரோன்களுக்கு பயப்படுகிறார்கள்.
மொராதாபாத் நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள மஹாலக்பூர் கிராமத்தில் சுமார் ஐந்தாயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
வழக்கமாக, இருட்டியவுடன் கிராமம் அமைதியாகிவிடும், ஆனால் இப்போது மக்கள் இரவு வரை வீடுகளுக்கு வெளியே அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் இக்ரார், “ஜூலை 22 ஆம் தேதி இரவு சுமார் 1 மணியளவில், கிராமத்திற்கு வெளியே ஒரு டிரோன் காணப்பட்டது. நான் அப்போது விழித்திருந்தேன். அதிகாலை 2 மணியளவில், டிரோன் ஒரு பக்கத்திலிருந்து வந்து மறுபுறம் சென்றது” என்று கூறினார்.
டிரோன்கள் குறித்து பயந்து, கிராமத்தில் சிலர் இரவு முழுவதும் மாடிகளில் இருந்து கண்காணிக்கிறார்கள்.
மஹாலக்பூரின் முன்னாள் தலைவரான பூரே கானும் தனது வீட்டிற்கு வெளியே கிராம மக்களுடன் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.
“நான் ஒரு டிரோனைப் பார்த்ததில்லை, ஆனால் கிராமம் பெரியது, எனவே அது மறுபுறம் காணப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள், இரவில் மாடிகளில் அமர்ந்துள்ளார்கள். தொலைபேசியில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள். காவல்துறையினரும் இரவில் ஒன்று அல்லது இரண்டு முறை வருகிறார்கள்”என்கிறார் பூரே கான்.
ஒரு மாதத்திற்கு முன்பு கிராமத்தில் ஒரு திருட்டு நடந்ததாகவும், அதன் பிறகு மக்கள் அதிக எச்சரிக்கையாகிவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
பரேலியில் டிரோன்களின் காரணமாக ஒரு பீதி நிலவுகிறது.
ஜூலை 28 அன்று, ஃபதேஹ்கஞ்ச் மேற்கு பகுதியின் மராலி கிராமத்தில் ஒரு வீட்டின் மாடியில் டிரோன் கண்டுபிடிக்கப்பட்டது. இது சமீபத்திய திருட்டு சம்பவங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
பரேலி எஸ்எஸ்பி அனுராக் ஆர்யா, இதுபோன்ற அழைப்புகள் 112 என்ற எண்ணுக்கு தொடர்ந்து வருவதாகக் கூறினார்.
மராலி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட டிரோன் குழந்தைகளுடையது என்றும், அதில் கேமரா இல்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படக்குறிப்பு, திருடர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை மக்கள் அடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.சந்தேகத்தின் அடிப்படையில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள்
டிரோன்கள் மற்றும் திருட்டு பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், பல பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களை , மக்கள் தாக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை கூறுகிறது, ஆனால் கிராமங்களில் தென்படும், முன்பின் தெரியாத நபர்கள் இன்னும் சந்தேகக் கண்களுடன் பார்க்கப்படுகிறார்கள்.
ஜூலை 26 அன்று, சம்பாலைச் சேர்ந்த மூன்று பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர், ஆனால் வழி தவறி அம்ரோஹாவில் உள்ள திதௌலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட படேய் கிராமத்தை அடைந்தனர்.
கிராம மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, திருடர்கள் என்று நினைத்து அடித்தனர்.
ஜூலை 14 அன்று, ஹசன்பூரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜாஹித்தையும், திருடன் என்று தவறாக நினைத்து மக்கள் தாக்கியுள்ளனர். அவரது இருசக்கர வாகனமும் உடைக்கப்பட்டுள்ளது.
“சாலையில் ஒரு கூட்டத்தைக் கண்டதும், நான் என்னவென்று கேட்டேன், ஒரு திருட்டு நடந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் முன்னோக்கி நகர்ந்தபோது, சிலர் என்னைத் தடுத்து அடிக்கத் தொடங்கினர். காவல்துறையினர் வந்தபோது தான் நான் காப்பாற்றப்பட்டேன்” என்று ஜாஹித் கூறினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதேபோல், மீரட்டின் கித்தோர் பகுதியில் துணி விற்கும் செய்யும் ஆரிஃப் என்பவரும் தாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“பல இடங்களில் கிராமவாசிகள் சந்தேக நபர்களைப் பிடித்தனர், ஆனால் விசாரித்ததில் அவர்கள் அருகிலுள்ள மக்கள் அல்லது வழிப்போக்கர்களாகத் தெரிந்தனர்” என்று அம்ரோஹா எஸ்பி அமித் குமார் ஆனந்த் கூறினார்.
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர். வெறிச்சோடிய சாலைகளில் செல்வோர் விசாரிக்கப்படுகிறார்கள். இதுவரை பெரிய அளவிலான திருட்டு சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் கூறினாலும், பல கிராமங்களில் அச்சம் நிலவுகிறது.
காவல்துறை என்ன சொல்கிறது?
மொராதாபாத் மற்றும் அம்ரோஹா காவல்துறை அதிகாரிகள், திருட்டுச் சம்பவங்களுடன் டிரோனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர்.
அம்ரோஹா எஸ்பி அமித் குமார் ஆனந்த் கூறுகையில், முன்னதாக டிரோன்கள் காணப்படுவது குறித்து பல புகார்கள் வந்தன, ஆனால் இப்போது அத்தகைய அழைப்புகள் குறைந்துவிட்டன என்கிறார்.
“மாவட்டத்தில் டிரோன்கள் வைத்திருக்கும் அனைவரையும் நாங்கள் கூட்டி, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினோம். முந்தைய அழைப்புகளில், காவல்துறையின் குழு சென்றடைவதற்குள் ட்ரோன்கள் மறைந்துவிடும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், காவல்துறை தெளிவுபடுத்திய பிறகும், கிராமங்களில் உள்ள மக்களிடையே இன்னும் அச்சம் நிலவுகிறது.
கிராம மக்களின் கூற்றுகள் சரியானவை அல்ல என்று காவல்துறை அதிகாரிகள் நினைக்கின்றனர்.
டிரோன் பறப்பதற்கான விதிகள்
படக்குறிப்பு, விதிகளின்படி, சில சந்தர்ப்பங்களில் டிரோன் பறக்கும் முன் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.டிரோன்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்தின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பல விதிகளை வகுத்துள்ளது.
டிரோனுக்கு ஒரு தனித்துவமான அடையாள எண்ணைப் பெறுவது அவசியம். பதிவுசெய்த பிறகு, டிரோனுக்கு ஒரு டிஜிட்டல் டேக் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் டிரோனை பறக்க அனுமதி பெறுவது கட்டாயமில்லை, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அனுமதி இல்லாமல் டிரோனை பறக்கவிட முடியாது.
மைக்ரோ மற்றும் பெரிய டிரோன்களை இயக்க உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
விதிகளின்படி, இரவில் டிரோன் பறக்க உள்ளூர் காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு