Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ரஷ்யாவில் நிலநடுக்கத்தால் விழுந்த வீட்டின் ஒரு பகுதிஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11:25 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.
ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.
சீனா, பிலிப்பின்ஸ் , இந்தோனீசியா, நியூசிலாந்து மற்றும் பெரு மற்றும் மெக்சிகோ வரை கூட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Russian Emergencies Ministry
படக்குறிப்பு, ரஷ்யா சுனாமிரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக அமெரிக்காவின் ஹவாயில் 4 முதல் 6 அடி உயரம் வரை அலைகள் பதிவாகியுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, சுனாமி அலைகள் நகருக்குள் புகும் காட்சிகள்ஜப்பானில், சுமார் 19 லட்சம் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடக்கு இவாட் மாகாணத்தில் 4.3 அடி (1.3 மீ) உயர சுனாமி அலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹவாயில் கூட்டமாக வெளியேறிய மக்கள்எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹவாயில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜப்பானில் கடற்கரைகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் அதிகாரிகள்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, குறைந்தது மூன்று சுனாமி அலைகள் ரஷ்ய துறைமுக நகரமான செவெரோ-குரில்ஸ்கின் சில பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளன
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ரஷ்யாவில் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்படும் மக்கள்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஹவாய் தீவில் வசிக்கும் ஒருவர் தனது வாகனத்தில் தண்ணீர் மற்றும் பிற பொருட்களை ஏற்றுகிறார்.ரஷ்யாவின் தூர கிழக்கில் 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹவாய், வைக்கிகி, ஓஹுவில் உள்ள ஆலா போர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டது.
சுனாமி வெளியேற்றும் பாதையின் (Tsunami Evacuation Route) அறிவிப்புப் பலகை காணப்படுகிறது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, வால்பரைசோ பகுதி மற்றும் சிலிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2011 ஆம் ஆண்டில் புகுஷிமா அணுமின் நிலையம் மூன்று முறை பேரழிவை சந்தித்தது.ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அங்கிருந்த 4,000 தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டதாக ஆலையின் இயக்குநர் கூறினார். மேலும் “அசாதாரணமாக” எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிலிப்பின்ஸ் பல கடலோரப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கைகளை ரத்து செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தரவுகளின் அடிப்படையில், கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க சீற்றங்கள் அல்லது அழிவுகரமான சுனாமி அலைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு