யுக்ரேனில் குண்டு சத்தம் கேட்டாலே பதற்றம் அடையும் நாய்காணொளிக் குறிப்பு, குண்டு சத்தம் கேட்டாலே பதற்றம் அடையும் நாய்யுக்ரேனில் குண்டு சத்தம் கேட்டாலே பதற்றம் அடையும் நாய்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நீங்கள் இந்தக் காணொளியில் பார்க்கும் லக்கி என்கிற நாய் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம் லக்கி மறைந்து கொள்ளப் பார்க்கிறது.

இந்த பிரச்னைக்காக லக்கிக்கு மயக்க மருந்துகள் கொடுக்கும்போது அது வேலை செய்வதில்லை என அதன் உரிமையாளர் ஒக்ஸானா புலானா தெரிவிக்கிறார்.

லக்கியை டோனெட்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ராணுவவீரர் ஒருவர் மீட்கும்போது அது இறக்கும் தருவாயில் இருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்த லக்கியை, ஒக்ஸானா தத்தெடுத்தார்.

வெடிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் லக்கியின் காதுகளை துண்டை வைத்து மறைக்கிறார் அல்லது அதன் மீது தண்ணீரை ஊற்றுகிறார் ஒக்ஸானா, இது தற்காலிகமாக உதவுகிறது என அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் இது எப்போதும் வேலை செய்வதில்லை. லக்கிக்கு சிறப்பு ஹெட்போன் அல்லது அமைதிபடுத்தும் உடுப்பு ஒன்றை வாங்கும் எண்ணத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு