யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்ற இளைஞன் வீட்டிற்கு அருகில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த செல்வச்சந்திரன் மிமோஜன் (வயது 27) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவில் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்வுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற இளைஞன் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீட்டிற்கு அருகில் இளைஞன் மூச்சற்று கிடப்பதனை அவதானித்த அயலவர்கள் வீட்டாருக்கு அறிவித்ததுடன், இளைஞனை மீட்டு அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் ஏற்கனவே உயரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அதனை அடுத்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது