சௌதியில் இந்தியர் உள்பட வெளிநாட்டவரும் இனி இடம் வாங்கலாம் – மெக்கா, மதீனாவில் சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இனி வெளிநாட்டு குடிமக்களும் சௌதி அரேபியாவில் சொத்து வாங்கலாம்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சௌதி அரேபியாவில் இனி இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவரும் சொத்து வாங்கலாம்.

இங்கு வாங்கப்படும் ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு அவர்கள் உரிமை பெறுவார்கள்.

இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் ஜூலை 25, வெள்ளிக்கிழமையன்று ‘உம் அல்-குரா கெஜட்’ இதழில் வெளியானது.

180 நாட்களுக்குள் இச்சட்டம் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகின்றது.

சௌதி அரேபியாவின் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக விவரிக்கப்படும் இந்தச் சட்டத்தின் புதிய விதிகள் என்னனென்ன , சௌதி அரேபியாவில் வெளிநாட்டு குடிமக்கள் எவ்வாறு சொத்துக்களை வாங்கலாம் போன்றவற்றை அறிந்து கொள்வோம்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சட்டம் என்ன கூறுகிறது ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் ரியல் எஸ்டேட் சந்தை மேலும் வளரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.இந்த மாத தொடக்கத்தில், சௌதி அரேபிய அமைச்சரவை இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இதன் கீழ்,

வெளிநாட்டு தனிநபர்கள்,நிறுவனங்கள்,லாப நோக்கற்ற நிறுவனங்கள்முதலீட்டு நிறுவனங்கள். போன்றவற்றுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கவோ அல்லது வைத்திருக்கவோ அனுமதி அளிக்கப்படுகின்றது .இந்த உரிமைகளில் சொத்துரிமை, குத்தகைக்கு விடுதல், சொத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கும் பயன்கள் ஆகியவை அடங்கும்.

ஆனால், அந்த சொத்து இருக்கும் இடம், அதன் வகை மற்றும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து இந்த உரிமைகள் மாறுபடும்.

குடியிருப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் ராஜ்ஜீய பணிகளுக்கான விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில நிபந்தனைகளுடன் சௌதி அரேபியாவில் குடியிருப்பு சொத்துகளை வாங்க வெளிநாட்டினருக்கு உரிமை உண்டு.சௌதி அரேபியாவில் சட்டப்படி வசிக்கும் வெளிநாட்டினர், தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக குடியிருப்புகளை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

பட்டியலிடப்படாத வெளிநாட்டு நிறுவனங்கள்உரிமம் பெற்ற முதலீட்டு நிதிகள்சிறப்பு நோக்கில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் (SPVs)இவர்கள் பணியாளர்கள் வசிக்க, அலுவலகம் நடத்த அல்லது வணிக பயன்பாட்டிற்காக சொத்துகளை வாங்கலாம்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் மெக்கா மற்றும் மதீனாவின் எல்லைக்குள் வரும் இடங்களில் கூட, சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் சொத்து வாங்க முடியும்.

சௌதி வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும், சொந்த நாட்டின் ஒப்புதலையும் பெற்றிருந்தால், ராஜ்ஜீய பணிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் சொத்துகளை வாங்க அனுமதிக்கப்படும்.

மெக்கா மற்றும் மதீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மதீனா மசூதிமெக்கா மற்றும் மதீனா எல்லைக்குள் வரும் பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு நகரங்களிலும், மிகவும் கடுமையான நிபந்தனைகளின் கீழ், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொத்து வாங்க அனுமதி அளிக்கப்படும்.

முதல் முறையாக, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் குடிமக்கள் இந்தப் பகுதிகளில் சொத்து வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், இதன் விதிகள் அனைத்து சௌதி அல்லாத குடிமக்களுக்கும் சமமாகப் பொருந்தும்.

எங்கு, எவ்வளவு சொத்து வாங்கலாம் என்பதை யார் தீர்மானிப்பார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி கெஜட்டின் படி , சௌதி அமைச்சர்கள் குழு, ரியல் எஸ்டேட் பொது ஆணையம் மற்றும் பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சில் ஆகியவை, எங்கு, எவ்வளவு சொத்து வாங்கலாம் என்பதைமுடிவு செய்யும்.சௌதி கெஜட்டின் படி , சௌதி அமைச்சர்கள் குழு, ரியல் எஸ்டேட் பொது ஆணையம் மற்றும் பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சில் ஆகியவை, எங்கு, எவ்வளவு சொத்து வாங்கலாம் என்பதை முடிவு செய்யும். அதில்,

வெளிநாட்டினர் எந்த பகுதிகளில் சொத்து வாங்கலாம்?சொத்தின் அதிகபட்ச உரிமை வரம்பு என்ன?பயன்பாடு அல்லது நுகர்வு உரிமைகளுக்கான கால வரம்பு என்னவாக இருக்கும்? போன்ற விஷயங்கள் அடங்கும்.பதிவு, வரிகள் மற்றும் சட்ட நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியாவைச் சேராத வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.சௌதி அரேபியாவைச் சேராத வெளிநாட்டு மக்கள், எந்தவொரு சொத்து பரிவர்த்தனையிலும் ஈடுபடும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.தேசிய ரியல் எஸ்டேட் பதிவாளரிடம் பதிவு செய்த பின்னரே சொத்தின் உரிமை பரிசீலிக்கப்படும்.சொத்து வாங்கும் வெளிநாட்டு மக்கள், 5 சதவீதம் வரை சொத்து பரிமாற்றக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.சட்டம் மீறப்பட்டால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சொத்து வாங்குவதற்கான விதிகள் மீறப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.சட்டத்தை மீறினால், 10 மில்லியன் சௌதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தவறான அல்லது பொய்யான தகவல் வழங்கப்பட்டால், அரசாங்கம் சொத்தை பறிமுதல் செய்யலாம். அதன் விற்பனையிலிருந்து பெறப்பட்ட தொகை அரசாங்கக் கணக்கிற்குச் செல்லும்.

அதேபோல், விதிமீறல்களை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன் முடிவுகளுக்கு எதிராக 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உங்கள் மனதில் இன்னும் சில கேள்விகள் எழக்கூடும்.

எந்தவொரு வெளிநாட்டு குடிமகனாலும் சௌதி அரேபியாவில் எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க முடியுமா?

இல்லை, வெளிநாட்டினருக்கான சொத்து உரிமைகள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

புனித நகரங்களில் (மெக்கா, மதீனா) சொத்து வாங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

வெளிநாட்டு மக்கள் சொத்துரிமை விதிகளை மீறினால் என்ன நடக்கும்?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு கோடி சௌதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம். கடுமையான விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், அரசு அதிகாரிகள் அத்தகைய சொத்தை விற்கலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு